Load Image
Advertisement

மாம்பழம் திருடிய போலீஸ்காரர் டிஸ்மிஸ்

Policeman dismissed for stealing mangoes    மாம்பழம் திருடிய போலீஸ்காரர் டிஸ்மிஸ்
ADVERTISEMENT


திருவனந்தபுரம் கேரளாவில் மாம்பழம் திருடிய போலீஸ்காரர் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் ஷிகாப், 35. கடந்த ஆண்டு செப்டம்பரில் இரவு பணி முடிந்து அவர் வீட்டுக்கு திரும்புகையில், அந்தப் பகுதியில் இருந்த பழக்கடைக்குள் புகுந்து, 600 ரூபாய் மதிப்பிலான மாம்பழத்தை திருடி எடுத்துச் சென்றார்.

ஷிகாப் திருடியதை, காஞ்சிரப்பள்ளி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக உறுதி செய்தனர்.

இதையடுத்து, ஷிகாப் உடனடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பின் விசாரணையில் அவரது குற்றம் உறுதியான நிலையில், நேற்று அவர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.


வாசகர் கருத்து (11)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அசிங்கமா இல்ல இது உனக்கு?

  • Shekar - Mumbai,இந்தியா

    இது என்ன அற்பமான தண்டனை, எங்கள் விடியலில் இப்படி இருந்தால் இந்நேரம் திருடிய காவலரை B-1 ஸ்டேஷன்ல இருந்து B-2 ஸ்டேஷன்னுக்கு மாற்றல் என்று கடுமையாய் தண்டித்திருப்பார்கள்

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இப்படி உடனடியாக தண்டனை கிடைக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தவர்களுக்கு பயம் இருக்கும்.

  • சீனி - Bangalore,இந்தியா

    பாவம் கேரளாவில் பிறந்தது உன் தப்பு, போலீசாய் சேர்ந்து திருடனாக மாறியதற்க்கு டிஸ்மிஸ் ஆகிவிட்டாய்... விடியல் ஆட்சியில் கூட்டணி அமைத்து மேலும் அள்ளிக்கொண்டு வா என அனுப்புவார்கள், உடனே பதவி உயர்வுடன் மாற்றல் கிடைக்கும். அணில் டிபார்ட்மெண்ட் 360க்கோடிக்கு அதிகாரிகளிடம் திருட்டுதனமாக வைத்திருந்த பாண்ட் எடுத்துள்ளனர். லஞ்சமும் ஒருவகையில் திருட்டே, எனவே லஞ்சம் என்ற வார்த்தையை திருட்டு என மாற்றினால் திருந்துவார்களா ?

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    கேரளாவில் 600 ரூபாய் மதிப்பிலான மாம்பழத்தை திருடியதற்கே டிஸ்மிஸ். இங்கு 5 கோடி வாங்கியவனை காப்பாற்ற முயற்சி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement