Load Image
Advertisement

‛ஊழலை ஒழிப்பதில் அக்கறையே இல்லாத காங்கிரஸ்: பிரதமர் மோடி பேச்சு


புதுடில்லி: ஊழலை ஒழிப்பதில் காங்கிரசிற்கு எந்த அக்கறையும் இல்லை என பாஜ., தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

Latest Tamil News

கர்நாடக பாஜ., தொண்டர்கள் 50 லட்சம் பேருடன் இன்று(ஏப்ரல் 27) காணொலி வாயிலாக, பிரதமர் மோடி பேசியதாவது: ஓரிரு நாட்களில் கர்நாடகா சென்று, அம்மாநில மக்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவேன். அம்மாநிலத்தில் பிரசாரம் செய்த பா.ஜ., தலைவர்கள், அங்குள்ள மக்களிடம் மிகுந்த பாசத்தைப் பெற்றுள்ளனர். இது பா.ஜ., மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.

கர்நாடகாவில் நிலையான மற்றும் பெரும்பான்மை ஆட்சி அமைக்க, மக்களிடம் நேரில் சென்று ஓட்டுக்களை கேளுங்கள். பா.ஜ.,வின் உழைப்பை மக்களுக்கு புரிய வையுங்கள். மற்ற கட்சிகளின் கவனம் ஆட்சியைப் பிடிப்பதில் உள்ளது. பா.ஜ., அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி அடைய செய்யும்.

கர்நாடக மாநில மக்கள் பா.ஜ., மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சியில் இருந்தால் தான் இரட்டை என்ஜின் அரசாக செயல்பட்டு விரைவான வளர்ச்சியை எட்ட முடியும். கர்நாடகாவில் பா.ஜ., வரலாற்று வெற்றியைப் பெறும்.

Latest Tamil News
ஊழலை ஒழிப்பதில் காங்கிரசிற்கு எந்த அக்கறையும் இல்லை. ஏனென்றால் அதுவே ஊழலின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. 2014ம் ஆண்டுக்குப் பிறகு, ஊழல் சம்பவம் குறைந்துள்ளது என்பதை நாடு முழுவதும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஊழல் சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க ஆதார் மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவை பெரிதும் உதவுகிறது.

மக்களுக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் உள்ளது. மேலும் அவர்களின் உத்தரவாதமும் காலாவதியாகிவிட்டது. நாட்டை மேம்படுத்துவதும், வறுமையில் இருந்து விடுவிப்பதும், இளைஞர்களின் திறனை வெளிக்கொண்டு வருவதும் எங்களது இலக்கு. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


வாசகர் கருத்து (20)

 • suresh Sridharan -

  ஊழலை பத்தி மோடி பேசாமல் வேறு யார் பேசுவா இப்படி ஊழல் பண்றது இல்ல பண்ண விடமாட்டோம் அப்படி இருக்கிறவங்க எதுக்கு 100 கட்சி கூட்டணி வைக்கணும் எங்க நம்மனால சம்பாதிக்க முடியாதோ? அப்படிங்கிற பயம் ஹாஹாஹா 😆

 • M Ramachandran - Chennai,இந்தியா

  தீ மு க்கா மானம் (இருந்தா தானெ) கப்பலேறி ஆயுள் நாடு வரைய சென்று சிரிப்பாய் சிரிக்குது. கட்சி கூலியா என குத்து வெட்டு வாரிசு குடும்பம் தூக்கமின்றி தவிக்குது. டில்லிக்கு படையெடுக்குது சமாதானம் தேட . இப்படி இருக்க ஊழலிய பற்றி பேச என்ன யோக்யத்தியிருக்கு அந்த (ஓசி பிரியாணி குவாட்டர் கும்பலுக்கு) ஜால்றா கும்பலுக்கு. .

 • venugopal s -

  இவர் பேசுவதையும் மக்கள் நம்புகின்றனர் என்றால் என்ன என்று சொல்ல?

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  இபபோது ஊழலை ஒழிக்கும் அதிகாரம் யார் கையில் இருக்கிறது, அமலாக்க துறை, சிபிஐ என எல்லா துறையையும் கையில் வைத்து கொண்டு ஊழலை ஓழிக்க அக்கறை இல்லாமல் இருபது யார்? ஏன் சார் உங்க தலையிலே நீங்களே மண்ணள்ளி போட்டுகிறீரங்க.... இன்னும் காங்கிரஸையே குறை சொல்லும் பழக்க தோஷம் போகலையா?

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  40% லஞ்ச ஆட்சியின் தலைவர் ரீல் விடுகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்