முதல்வரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி... அதிகாரிகளை தண்டியுங்கள்: பா.ஜ., வலியுறுத்தல்
ராமநாதபுரம்: போலி கோப்பையைக் காட்டி முதல்வர் ஸ்டாலின், மற்றும் உதயநிதியை ஏமாற்றிய வினோத்பாபு என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுலபமாக ஒரு நபரால் அமைச்சர், முதல்வர் ஆகியோரை ஏமாற்ற முடிகிறது என்றால் நிர்வாக சீர்கேட்டின் உச்சக்கட்டம் என தமிழக, பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செவ்வனுாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத்பாபு, 40. இவர் 'வீல்சேர்' கிரிக்கெட் உலககோப்பை போட்டியில் வென்றதாக, இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் என்றும், 2022 ஆசிய கோப்பை போட்டியில் வென்றதாகவும், பயிற்சியாளர் உள்ளிட்டோர் போலியான ஆவணம் தயார் செய்துள்ளனர்.
ஏமாற்றம்:
அதை வைத்து அமைச்சர்கள் உதயநிதி, ராஜகண்ணப்பன் ஆகியோருடன் போட்டோ எடுத்துக் கொண்டார். பின் 2023ல் லண்டனில் நடந்த வீல் சேர் கிரிக்கெட் டி- 20 உலகக் கோப்பையை வென்றதாக கூறி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். போலி கோப்பை, ஆவணம் மூலம் முதல்வர் வரை ஏமாற்றிய வினோத் பாபு, அவருக்கு உதவியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கு:
இவர்களால் உண்மையான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர் மீது ராமநாதபுரம் எஸ்.பி., தங்கதுரையிடம், ஏ.பி.ஜே., மிஷல் பாரா ஸ்போர்ட்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சரவணக்குமார், செயலர் டேவிட் வின்சென்ட் ராஜா ஆகியோர் மனு அளித்தனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளி வினோத் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பாஜ.,தமிழக, பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: சுலபமாக ஒரு நபரால் அமைச்சர், முதல்வர் ஆகியோரை ஏமாற்ற முடிகிறது என்றால் நிர்வாக சீர்கேட்டின் உச்சக்கட்டம். நுண்ணறிவு பிரிவின் ஒட்டு மொத்த தோல்வி.
முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற அவலம்.
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, நம் முதல்வரின் பாதுகாப்பு விதி மீறலின் வெளிப்பாடு. நிர்வாகத்தின் செயல்பாட்டை கேள்விக்குறியாக்கும் சம்பவம். தொடர்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (30)
ராம்சாமிக்கே அல்வா கொடுக்கும் லாவகம்... பேஷ்... பேஷ்... ஒன்னத்தாண்டா தீம்கா இவ்வளவு நாளும் தேடிக்கொண்டு இருந்தது... கண்டு பிடித்துவிட்டார்கள் இனி பட்டாபிசேகம்தான் மீதமிருக்கிறது...
யுனஸ்கோ விருதை உருவாக்கி அதை தனக்குத்தானே கொடுத்து புளங்காகிதம் அடைந்தவர்களை ஒப்பிட்டால் இதுவெல்லாம் ஒன்றுமேயில்லை... அவர்களை பின்பற்றும் மொரட்டு உபிஸ், சாதா உபிஸ் மற்றும் ஆவேசமாக முட்டுக் கொடுப்போர் இன்னும் இன்னும் மேலானவர்கள்... அரை நூற்றாண்டாக சரித்திரம் படைக்கிறார்கள்...
Thaththi athigaaringa irukumpothu ithu thodarkathaithaan
தத்திகளை அரியணையில் ஏற்றினால் இது தான் நடக்கும்... கல்யாணத்துல மது குடிக்கலாம்... பன்னெண்டு மணி நேரம் வேலை வாங்கலாம், கொலை காரர்களை கட்டி புடிக்கலாம், மணல் கொள்ளை அடிக்கலாம்... நல்லது மட்டும் செய்ய கூடாது...
கலைஞர் ,டாக்டர் கலைஞர் எப்படி ஆனார்.அது போல்தான் கோப்பை