'மறைந்த வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 'சமூக நீதி காவலர்' என வி.பி.சிங்கை, தி.மு.க.,வினர் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 1984-ல் வரலாற்று வெற்றியை பெற்ற ராஜிவ், 1989-ல் தோல்வியை தழுவினார். அதன் பின், காங்கிரசுக்கு இதுவரை தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த, 2004 முதல் 2014 வரை, மாநில கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஆட்சியை தான் காங்கிரஸ் நடத்தியது. பின், 2014, 2019 லோக்சபா தேர்தல்களில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத அளவுக்கு, அக்கட்சி தோல்வி அடைந்தது.

இப்படி காங்கிரசின் வீழ்ச்சிக்கு வித்திட்ட வி.பி.சிங்கிற்கு, தி.மு.க., அரசு அதிக முக்கியத்துவம் அளிப்பது, காங்கிரஸ் தலைவர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் மகள் திருமணத்தில் பங்கேற்க, நேற்று முன்தினம் கார்கே, சென்னை வந்தார். அப்போது, இது குறித்த தன் வருத்தத்தை, தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் கோஷ்டி தலைவர் ஒருவர் கூறியதாவது: ராஜிவ் அமைச்சரவையில் நிதி, பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதே, முக்கிய தகவல்கள், ஆவணங்களை, பா.ஜ., தலைவர்களுக்கு வழங்கியவர், வி.பி.சிங். அதன் அடிப்படையிலேயே 'போபர்ஸ்' ஊழலை பா.ஜ., பெரிதுபடுத்தியது.
கடந்த 1989 லோக்சபா தேர்தலில், ஹிந்தி பேசும் மாநிலங்களில், பா.ஜ.,வுடன் மறைமுக கூட்டணி வைத்து காங்கிரசை வீழ்த்தினார். தேர்தலுக்கு பின், பா.ஜ., ஆதரவுடன் பிரதமரானார். இப்படி பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு பாதை அமைத்து கொடுத்த வி.பி.சிங்கிற்கு, தி.மு.க., அரசு இப்போது திடீர் முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்பது தெரியவில்லை.
நேரு, இந்திரா, ராஜிவ் என காங்கிரஸ் தலைவர்களே, தமிழக மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றனர். இப்போது, சமூக நீதி காவலர் என்ற பெயரில் வி.பி.சிங்கை, தமிழகத்தில் முன்னிலைப்படுத்த, தி.மு.க., திட்டமிடுகிறது. சென்னைக்கு வந்த கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் தனியாக பேசினார். அப்போது, வி.பி.சிங்கிற்கு தி.மு.க., அளிக்கும் முக்கியத்துவம் குறித்து தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (19)
காஷ்மீர் பயங்கரவாத முஸ்லிம்களால் பண்டிட்டுகள் வேட்டையாடப்பட்ட போது வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தார் பிரதமர் விபி சிங் பயங்கரவாத தொடர்புள்ள சைய்து வை மூத்த மந்திரியாக வைத்திருந்தார். அவரது மகளை விடுவிக்க என்னவெலலாம் நடமாடினார் இந்த வி பி சிங் ? எதற்காக இவருக்கு சிலை என்று புரியவில்லை.
காங்கிரஸை ஒழிக்க அச்சாரம் போட்ட விபி சிங் மீது வருத்தம். அப்போ காங்கிரஸை 1991ல் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்த ராஜீவ் கொலையாளிகள் மீது ஆத்திரம் இல்லையா? அதனால் தான் பேரறிவாளனை கட்டி அணைத்தவருக்கு சாமரம் வீசுகிறார்களா?
மிசா வுல கைது செய்து காங்கிரஸ் விடியலு சாரை அடிச்சதை இன்னும் நாங்க மறக்கல, விடியல் சார் உங்கள வெச்சி செய்வாரு
திமுக-காங்கிரஸ் திருமணபந்தம் முறிந்தது .... திமுக ஏற்கனவே பிஜேபியிடம் மனதை பறிகொடுத்துவிட்டது ....
ellam பாலிடிக்ஸ் தான்? ஊறிப்போய்விட்டது?எங்களால் மாற முடியாது?