Load Image
Advertisement

ராகுல் அப்பீல் மனு: விசாரிக்க நீதிபதி மறுப்பு

Rahuls appeal plea: Judge refuses to hear   ராகுல் அப்பீல் மனு: விசாரிக்க நீதிபதி மறுப்பு
ADVERTISEMENT
சூரத்: மோடி சமூகம் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவை விசாரிக்க நீதிபதி மறுத்துள்ளார்.


காங்., முன்னாள் எம்.பி., ராகுல் மோடி என்ற பெயர் உடைய அனைவருமே திருடர்களாக உள்ளனர்' என அவதூறாக பேசினார்; இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.


மேலும், ராகுல் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து, தண்டனையை 30 நாட்களுக்கு தள்ளி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.சிறை தண்டனை பெற்றதால் ராகுலை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து லோக்சபா செயலகம் அதிரடியாக உத்தரவிட்டது.Latest Tamil News
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு மற்றும் தனக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.இந்த மனு நீதிபதி கோபி முன் விசாரணைக்கு வரும் என செய்திகள் வெளியாகின.

இன்று வெளியான தகவலில், ராகுல் அப்பீல் மனுவை நீதிபதி கோபி விசாரிக்க மறுத்ததாகவும், வழக்கை வேறு பெஞ்சிற்கு மாற்றி ஐகோர்ட் பதிவாளரரிடம் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


வாசகர் கருத்து (17)

  • S.Govindarajan. - chennai ,இந்தியா

    தவறுக்கு வருந்தாத ஜென்மங்கள் நீதிமன்றத்தையே மிரட்டுவார்கள்.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    தான் எதோ பெரிய ராஜகுமாரன் என்ற மதப்பில் உலாவும் இவனுக்கு எந்த சட்டமும் கிடையாது

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    நீதிபதி லோயா நினைவில் வந்து போயிருப்பார். பயம் அடிவயித்தை கலக்கி இருக்கும்.

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    வாயை கொடுத்து வகையா புண்ணாக்கிக் கொண்ட ராகுல், இப்போ எரியுதே எரியுதே என்று கதறுகிறார். அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும். இந்தா இப்போ உய்த்துவிட்டதுல்ல

  • முருகன் -

    அவர் பிரச்சினை அவருக்கு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்