Load Image
Advertisement

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு: பிரதமர் மோடி சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பேச்சு

புதுடில்லி: இந்தியா என்பது பன்முகத்தன்மையை ஒரு சிறப்பு என நினைத்து வாழும் நாடு. வெவ்வேறு மொழிகள் மற்றும் கலைகள் ஆகியவற்றை நாங்கள் கொண்டாடுகிறோம் என சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

Latest Tamil News

மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் இணைந்து சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது. சவுராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழகம் மற்றும் குஜராத் இடையே வளமான கலாசார பாரம்பரியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. குஜராத் மாநிலம் சோம்நாத் என்ற இடத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த ஏப்., 17ம் தேதி துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து அங்கு சென்ற மக்களுக்கு மேள, தாளம் முழங்கிட சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 10 நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 26) நிறைவடைந்தது. இதையொட்டி, நிறைவுநாள் விழா ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் 'சவுராஷ்டிரா -தமிழ் சங்கம் பிரஷஸ்தி' புத்தகத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் வெளியிட்டார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா என்பது பன்முகத்தன்மையை ஒரு சிறப்பு என நினைத்து வாழும் நாடு. வெவ்வேறு மொழிகள் மற்றும் கலைகள் ஆகியவற்றை நாங்கள் கொண்டாடுகிறோம். நமது நம்பிக்கை முதல் ஆன்மிகம் வரை எல்லா இடங்களிலும் பன்முகத்தன்மை உள்ளது.

Latest Tamil News
நாம் கலாசார மோதலை ஊக்குவிக்காமல் நமக்கான நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும். கலாசார மோதலை ஊக்குவிக்கக் கூடாது.வேற்றுமையில் ஒற்றுமை என்ற மகத்தான கொள்கையை கொண்டாடும் நாடு இந்தியா. நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

சுதந்திரத்தின் பொற்காலத்தில், சவுராஷ்டிர தமிழ் சங்கமம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் மூலம் புதிய பாரம்பரியத்தை நாம் காண்கிறோம். சில மாதங்களுக்கு முன், பனாரஸில் காசி தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இன்று, மீண்டும் சவுராஷ்டிரா நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் இந்தியாவின் கலாசாரத்தை எடுத்துரைத்தது. இவ்வாறு அவர் பேசினார்.வாசகர் கருத்து (10)

 • Kanagaraj M - Pune,இந்தியா

  அடிமை அ தி மு க மற்றும் திருட்டு தி மு க - வை ஆதரிக்கிறேன் என்று நான் சொல்லவே இல்லையே.

 • Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்

  இந்த கனகராஜ் என்ன அசைக்க முடியாத நம்பிக்கை பாருங்கள்.இவ்வளவு ஊழல் குற்றங்கள் செய்தாலும் நாங்கள் வால் தான் ஆட்டுவோம் என்கிற உங்களை போல் உள்ளவர்களை......

 • g.s,rajan - chennai ,இந்தியா

  என்ன இருந்தாலும் இந்த சவுராஷ்டிரா மக்களிடம் மோடிஜிக்கு ரொம்பத் தான் பாசம் பொங்கி வழியுது ....

 • g.s,rajan - chennai ,இந்தியா

  பத்துத் தலை ராவணன் முகம் மாதிரின்னு சொல்றாரு ....

 • அப்புசாமி -

  ரயில்.பெட்டிகளில் பெயிண்ட் அடிச்ச செலவுலேருந்து அவிங்க போய் அடிச்ச கூத்து வரை யாரோட செலவு கோவாலு? அம்பது வருஷமா நவஜீவன் எக்ஸ்பிரஸ்ல சௌராஷ்டிராக் காரங்க தினமும் போய் வந்துக்கிட்டே இருக்காங்க கோவாலு. இப்போத்தான் இவிங்க கூட்டிக்கிட்டுப் போய் காமிக்க்றாங்களாம் கோவாலு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்