Load Image
Advertisement

திரண்ட கூட்டத்தால் பன்னீர் உற்சாகம்: பழனிசாமியை வீழ்த்த புதிய திட்டம்

Crowd cheers Panneer: New plan to topple Palaniswami  திரண்ட கூட்டத்தால் பன்னீர் உற்சாகம்: பழனிசாமியை வீழ்த்த புதிய திட்டம்
ADVERTISEMENT
சென்னை: திருச்சி மாநாட்டில் திரண்ட கூட்டத்தால் உற்சாகம் அடைந்துள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அடுத்த கட்டமாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை வீழ்த்த, சசிகலா, தினகரனுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாநாட்டில் திரண்ட கூட்டம், பன்னீர்செல்வத்திற்கு பெரும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. திருச்சி மாநாட்டு மேடையில், பன்னீர்செல்வத்தின் முகத்தில் அதை பார்க்க முடிந்தது. மாநாட்டில் பேசிய பன்னீர்செல்வம், பழனிசாமியை வீழ்த்தும் தன் எதிர்கால திட்டத்தை சூசகமாக வெளிப்படுத்தினார்.

'என்னை இருமுறை ஜெயலலிதாவும், மூன்றாவது முறை முதல்வராக்கிய சசிகலாவும் என்னிடம் கேட்டதும், முதல்வர் பதவியை கொடுத்து விட்டேன்' என்று கூறிய பன்னீர்செல்வம், 'தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கு பழனிசாமி பெரும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்' என, சசிகலாவுக்கு ஆதரவு குரல் கொடுத்தார்.

மாநாட்டுக்கு வந்திருந்த பலரிடம், ஒரு சமுதாயத்திற்கு எதிராக பழனிசாமி செயல்படுகிறார் என்ற கோபம் வெளிப்பட்டது. மாநாட்டிற்கு வந்திருந்தவர்களில் 70 முதல் 80 சதவீதத்தினர், தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்தே வந்திருந்ததையும் காண முடிந்தது.

பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் சிலர், 'அ.தி.மு.க., என்ற கட்சி, பழனிசாமி தலைமையில் சென்று விட்டது. மீட்டெடுக்க வேண்டுமானால், தேர்தலில் அவர்களை வீழ்த்த வேண்டும். அதற்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஆதரவை முழுமையாக பெற வேண்டும். 'அதற்கு சசிகலா, தினகரனுடன் இணைந்து செயல்பட வேண்டும். பன்னீர்செல்வத்தின் திட்டமும் அதுதான்' என்றனர்.
Latest Tamil News
ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும் ராசியான ஜி- கார்னர் திடலில் நடந்த மாநாடு, பன்னீர்செல்வத்திற்கும் ராசியாக அமையுமா, பழனிசாமியை வீழ்த்தும் அவரது திட்டம் வெற்றி பெறுமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

'துரோகி, சர்வாதிகாரி!'பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க., தலைமைப் பதவிக்கு, யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அந்தப் பதவிக்கு வருபவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எம்.ஜி.ஆர்., வகுத்த இந்த விதியை குழி தோண்டி புதைத்து, ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்கி, தனக்குத் தானே மகுடத்தை சூட்டிக் கொண்டார் துரோகி.

துரோகம் செய்த சர்வாதிகாரியை கண்டித்தும், எம்.ஜி.ஆர்., வகுத்த விதியை மீண்டும் கொண்டு வரவும், அ.தி.மு.க.,வை மீட்கவும், திருச்சியில் நேற்று முன்தினம் முப்பெரும் விழா நடந்தது. என் அறைகூவலை ஏற்று பங்கேற்ற, லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றி. மாநாடு வெற்றி அடைய பாடுபட்ட தொண்டர்கள், அரசியல் ஆலோசகர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து (27)

 • saravana kumar -

  தனியார் செய்தி சேனலில் 200ரூபாய்க்கு இதுவே அதிகம்,சிட்டாய் பறந்த சின்சியர் ஆதரவாளர்கள் you tupe யில் பாருங்கள் புரியும்

 • Raja Vardhini - Coimbatore,இந்தியா

  திமுக, நேரு, பணம். சரக்கு,பிரியாணி......துரோகி பன்னீர் உற்சாகமடைய ஒரு காரணமும் இல்லை...

 • Krishnan Periyasamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  அட போங்க வைகோ திமுக வில் இருந்து பிரிஞ்சப்ப இதே திருசியில கூடின கூட்டம் கொஞ்சம் அல்ல இதுபோல பலமடங்கு அத்தனை பெரும் கூட்டமும் காசு வாங்காமல் வந்த கூட்டம் ஆனால் ஒண்ணுக்கும் உதவவில்லை. திருச்சி முதல் அரசியல் மாநாட்டுக்கு உகந்த நகரம் அல்ல. இதை அவர் திண்டுக்கல்லில் கூட்டியிருக்கலாம்.

 • Sakthi - DIST KORBA CG,இந்தியா

  It appears that OPS is living in fools paradise. Crowd is not at all a matter. He should have some political maturity to analyze when no MLA/MP is supporting him how he could expect that people will support blindly and rally behind him. Neither he is MGR nor Jayalalitha and whatever position he got in AIADMK because he is a dummy person and don't pose any threat to his masters. Both OPS and EPS don't have any political future and at the most they can become either an MLA or MP for that they have to spend several cores of rupees. They must understand the ground reality.

 • R S BALA - CHENNAI,இந்தியா

  அப்போ தர்மயுத்தம் என்னாச்சி?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்