Load Image
Advertisement

வந்தே பாரத் ரயிலில் போஸ்டர் ஒட்டி காங்., அலங்கோலம்

Poster on Vande Bharat train by Congress, Ala.Nkolam   வந்தே பாரத் ரயிலில் போஸ்டர் ஒட்டி காங்., அலங்கோலம்
ADVERTISEMENT
பாலக்காடு: வந்தே பாரத் ரயிலில் பாலக்காடு காங்., எம்.பி.,யை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டரை போலீசார் கிழித்து அகற்றினர்.

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை நேற்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் இந்த ரயில் மாலை 4.30 மணியளவில் ஷொர்ணூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஸ்ரீகண்டனை வாழ்த்தி ரயிலில் போஸ்டர் ஒட்டினர்.

தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து போஸ்டர்களை கிழித்து அகற்றினர். ரயிலில் போஸ்டர் ஒட்டியதற்கு பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

எம்.பி., ஸ்ரீகண்டன் கூறுகையில், ''ரயிலில் போஸ்டர் ஒட்டியது யார் என்று எனக்கு தெரியாது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


வாசகர் கருத்து (12)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    அராஜகம் செய்வததில் காங்கரஸ் அடுத்த தீ மு க்கா

  • P Ravindran - Chennai,இந்தியா

    பொருக்கிப்பயல்கள்

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    நல்லா பாத்துக்கோங்க. காங்கிரஸ் தான் நாட்டை காப்பாற்றுமாம். தன் வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்யாதவன், ஊரை திருத்த கிளம்பின கதை.

  • Siva - Aruvankadu,இந்தியா

    100% படச்சவங்களாமா... நல்ல காமேடி.

  • Anand - chennai,இந்தியா

    கூமுட்டைகள் நிறைந்த இரண்டாவது மாநிலம்......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement