Load Image
Advertisement

வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா?: வானதி சீனிவாசன் கேள்வி

Are some other forces driving the state?: Vanathi Srinivasan questions   வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா?: வானதி சீனிவாசன் கேள்வி
ADVERTISEMENT
சென்னை: 'முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்றால், தி.மு.க., அரசு அவர் தலைமையில் தான் இயங்குகிறதா?' என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:



திருமண மண்டபம், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை வினியோகிக்க, சிறப்பு அனுமதி அளிக்கும் அரசாணையை, ஒரே நாளில் தி.மு.க., அரசு திரும்ப பெற்றது. அதேபோல், 12 மணி நேர வேலை சட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக, முதல்வர் அறிவித்துள்ளார்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, இரு ஆண்டுகளில், இதுபோல் ஓர் உத்தரவை வெளியிட்டு, திரும்பப் பெறுவது, ஏற்கனவே நடந்திருக்கிறது. நிர்வாக சீர்கேடுகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது.

Latest Tamil News
அரசு முடிவுகளுக்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போது, ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

முதல்வருக்கு தெரியாமல் நடந்து விட்டது என்றால், தமிழகத்தில் உள்ள தி.மு.க., அரசு, அவர் தலைமையில் இயங்குகிறதா அல்லது வெளியில் இருந்து வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (4)

  • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

    இந்த நாட்டில் மக்களாட்சி என்பது பெயரளவிற்குத்தான்.ஊழல் மிக்க அதிகார வர்க்கம்தான் நாட்டை ஆள்கிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் அதிகார வர்க்கத்திடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அவரவர் காட்சிகளை வளர்ப்பதில் குறியாக உள்ளதால் அவர்கள் பெயரில் காட்டாட்சி நடத்துகின்றனர்.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    'வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா?': வானதி சீனிவாசன் கேள்வி...ஹி...ஹி..ஹி...இதிலென்ன சந்தேகம்? ரௌடிகள், குண்டர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், திருட்டு திமுகவின் கொள்ளை அடிக்கும் அல்லக்கைகள், உடன்பிறப்புகள் இவர்கள்தான் சுடாலினை இயக்குகிறார்கள்.

  • karupanasamy - chennai,இந்தியா

    பழைய சினிமாவில் வரும் காமெடி டயலாக் போல ....ன்னு சொல்லாம சொல்லுறமாதிரி இருக்கு.

  • raja - Cotonou,பெனின்

    இதே போன்று கேடுகெட்ட விடியலுக்கு ஒன்றுமே தெரியாது போலவும் நடுவில் இருப்பவர்களால் தான் இந்த பிரச்சனை என்று அல்லக்கை ஆர்ஸ்பி ஊடகங்கள் சித்தரிக்க முயலுகின்றன...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்