Load Image
Advertisement

ஜெர்மன் பத்திரிகை கார்ட்டூன்: இந்தியாவில் கடும் எதிர்ப்பு

German magazine Cartoon: strong opposition in India   ஜெர்மன் பத்திரிகை கார்ட்டூன்: இந்தியாவில் கடும் எதிர்ப்பு
ADVERTISEMENT
புதுடில்லி: மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளதை கேலி செய்து, ஜெர்மன் நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ள கேலி சித்திரத்துக்கு, கடும் கண்டனங்கள் எழுந்துஉள்ளன.

கண்டனம்:



மக்கள் தொகையில் உலக அளவில் முதலிடம் வகித்து வந்த சீனாவை, இந்தியா முந்திவிட்டதாக ஐ.நா., சமீபத்தில் அறிவித்தது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த, 'டெர் ஸ்பீகல்' என்ற பத்திரிகை, இது தொடர்பாக கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், நம் நாட்டு பயணியர் ரயிலில் மக்கள் கூட்டம் அலைமோதுவது போலவும், அதன் மேற்கூரையில் கூட மக்கள் நின்றபடி, மூவர்ண கொடியுடன் பயணிப்பதாக படம் வரையப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே சீனாவின் அதிநவீன, 'புல்லட்' ரயில் இரண்டு ஓட்டுனர்களுடன் பயணிப்பதை போல கேலி சித்திரம் வெளியாகி உள்ளது.

இதற்கு சமூக வலதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இனவெறியை வெளிப்படுத்தும் இந்த கேலிச்சித்திரம் தரக்குறைவான கருத்தை முன்வைப்பதாக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Latest Tamil News

சிந்தனை:



பா.ஜ.,வை சேர்ந்த மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'இந்தியாவை கேலி பேசும் உங்கள் சிந்தனை சிறப்பானதாக தோன்றவில்லை.

'பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ஜெர்மனியை விட பொருளாதாரத்தில் மிகப் பெரிய நாடாக இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உருவாகும்' என, குறிப்பிட்டுள்ளார்.



வாசகர் கருத்து (31)

  • Viviyan - Salem ,இந்தியா

    உள்ளதை தான் கூறுகிறார்கள்... உலக நாடுகளை ஏமாற்ற முடியாது. வளர்ச்சி வளர்ச்சி என வாயில் வடை சுட்டது தான் மிச்சம்... எங்கும் வரி எதற்கும் வரி

  • Selvam v - Tirupur ,இந்தியா

    நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அன்னியர்கள் நம்மளை கேலி செய்யும்போது ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். அதுவே சிறந்த தேசப்பற்று.

  • Baskaran - Chennai ,இந்தியா

    This is just cartoon. And in reality, up to some level our sleeper class and unreserved class bogies are always overcrowded in the trains which leaves from UP, Bihar towards Gujarat or Southern states. So just leave it

  • இந்தியன். - Hyderabad ,இந்தியா

    ஒரு நாட்டின் மனித வளம்தான் அந்நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.

  • இந்தியன். - Hyderabad ,இந்தியா

    உண்மையில் மனித வளம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்