Load Image
Advertisement

தி.மு.க., முதல் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் நாங்கள் இல்லை

DMK, we are not controlled by the first family    தி.மு.க., முதல் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் நாங்கள் இல்லை
ADVERTISEMENT
சென்னை: 'தி.மு.க.,வின் முதல் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில், 'ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ்' நிறுவனம் இல்லை' என, ஜி ஸ்கொயர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் வெளியிட்ட தி.மு.க., சொத்து விபரங்கள் குறித்த பேட்டிக்கு, மறுப்பு தெரிவிக்கும் வகையில், ஜி ஸ்கொயர் நிறுவன நிர்வாகிகள், நேற்று வெளியிட்ட அறிக்கை:

'ஜி ஸ்கொயரின் உரிமையாளர்கள், தி.மு.க.,வின் முதல் குடும்பத்தினர்' என்றும், 'இந்நிறுவனத்தின் மொத்த வருமானம், 38,827 கோடி ரூபாய்' என்றும், இது ஊழல் பணம் என்றும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

எங்கள் நிறுவனம், தி.மு.க.,வின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ, அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என்பதை, தங்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; இவற்றுக்கு எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை.

நீங்கள் குறிப்பிட்டுள்ள, எங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு தவறானது. நிறுவனங்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை பார்த்தால், உண்மை நிலவரம் தெரியவரும்.

Latest Tamil News
எங்கள் சொத்து மதிப்பு, 38,727 கோடி ரூபாய் என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பதை, நாங்கள் மறுக்கிறோம். ஜி ஸ்கொயர் மற்றும் எங்கள் பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்களை, தவறான மதிப்புகளோடு நீங்கள் சித்தரித்துள்ளீர்கள்.

எங்களது பல கட்டுமான திட்டங்கள், பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் தான் நாங்கள், சொத்துகளை வாங்கி விற்கும் நபராக செயல்படுகிறோம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது, 38,727 கோடி ரூபாய்க்கு மொத்த நிலத்தையும் நாங்களே வாங்கி வைத்துள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை, 6,000க்கு மேற்பட்ட வாடிக்கையாளரர்களுக்கு நாங்கள் மனைகளை விற்று இருக்கிறோம்.

ஏற்கனவே, விற்பனையான மனைகளின் மதிப்போடு, பழைய மதிப்பையும் சேர்த்து தவறான வருவாய் கணக்கு காட்டியுள்ளீர்கள். நாங்கள் வாங்கி விற்ற நிலங்களுக்கு எங்களிடம் முறையான ஆதாரங்கள் இருக்கின்றன.

நாட்டின் வளர்ச்சிக்காவும், மக்களின் நலனுக்காகவும், சமூக முன்னேற்றத்துக்காகவும் தொடர்ந்து உழைத்து வருகிறோம். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களை அணுகவும்; தேவையான விளக்கங்களை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (63)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தி.மு.கவில் நிறையா குடும்பங்கள் இருப்பதால் ஒரே குழப்பம்....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    எது எப்படியோ தி,மு,க கும்பலுக்கு ஒரு வழியா கட்டம் கட்டியாச்சு ....

  • Devan - Chennai,இந்தியா

    Tell all this to IT AND CBI departments

  • Maha - Singapore ,சிங்கப்பூர்

    Gsquare , put a case ik court...then we will see the truth..hahajh

  • Kannan rajagopalan - Chennai,இந்தியா

    அவர்களே எங்கள் கட்டுப்பாட்டில்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்