திமுக மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்க முயற்சி: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் மாவட்ட கலெக்டர்கள் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை கமிஷனர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு.
மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுக.,வினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, சமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பா.ஜ., சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூருவில் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடகாவில் மீண்டும் பாஜ., ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புக்கின்றனர். மடியில் கனமில்லை எனில் வழியில் பயமில்லை; ஊழல் செய்வதால் திமுக பயப்படுகிறது. ஏப்ரல் 25,26ல் மத்திய அமைச்சர்கள் பலர் பரப்புரைக்காக கர்நாடகா வர உள்ளனர். வகுப்பறையில் ஹிஜாப் மட்டுமல்ல, காவி உடையும் வேண்டாம் என்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (21)
குடிப்பவர்கள் திருந்தாத வரை மாற்றம் நிகழாது
ஒருவேளை அந்த மது ஆலைகளை விரிவாக்கம் செய்யக்கூடும்......தொழிலை அதிகரிக்க.....
இல்ல கயிறு தொழிலையே மேம்படுத்துவார். தென்னை விவசாயிகள் இதை புரிந்து கொள்வார்களா ?
அடுத்த கட்டமாக கல்லூரிகளிலும் மது விநியோகிக்க தடையில்லை என்ற அறிக்கையை எதிர்பார்க்கலாம்
ஒரு அல்லக்கை சொல்லுது அதானிக்கு சாராய பிசினஸ் ஆம்? திருட்டு ரயில் ஏறி வந்து சாராய பிசினஸ் பண்றவன் குடும்ப அடிமை வேற எப்படி பேசும்