Load Image
Advertisement

ரூ.30 ஆயிரம் கோடியால் தடுமாறும் திமுக; பழனிசாமி தாக்கு

30,000 crore corruption is not a trivial matter: Palaniswami  ரூ.30 ஆயிரம் கோடியால் தடுமாறும் திமுக; பழனிசாமி தாக்கு
ADVERTISEMENT
மதுரை: 30 ஆயிரம் கோடி ரூபாய் சாதாரணமான விஷயம் அல்ல. பணத்தை எங்கு வைப்பது என தடுமாறி கொண்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான பழனிசாமி கூறினார்.

மதுரையில் நிருபர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது: 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரிவராது. சுவிட்ச் போட்டால் இயங்குவது போன்றது அல்ல மனித வாழ்க்கை. 12 மணி நேர வேலை செய்ய தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல. இதற்கு கூட்டணி கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்படியென்றால், இதன் ஆழத்தை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலை. ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலை. இதுதான் ஸ்டாலின் பண்பாடு.

30 ஆயிரம் கோடி ரூபாய் சாதாரணமான விஷயம் அல்ல. நிதியமைச்சர் கூறுவதை பார்க்கிறோம். அது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவுகிறது. ஆடியோ விவகாரம் புனையப்பட்டதா இல்லையா என்பதை, நிதியமைச்சரே பேசிவிட்டு, அவரே எப்படி சொல்ல முடியும். தற்போது, இந்த விவகாரத்தில் அவர் பேசியது தான் பெரிய சந்தேகமாக உள்ளது. அவர் அறிக்கைவெளியிட்ட பிறகு தான், இந்த விவகாரத்தில் ஏதோ சமாச்சாரம் உள்ளது என தோன்றுகிறது. இது அவரது குரல் தான்.

30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை என்ன செய்வது, எங்கு வைப்பது என தடுமாறி கொண்டுள்ளனர். இதையெல்லாம் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். மத்திய அரசு முழு விசாரணை மேற்கொள்ள வலியுறுத்துவோம். கவர்னரிடம் மனு அளிப்போம். ஆடியோ உண்மை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேதோ விஷயத்திற்கு எல்லாம் அறிக்கை அளிக்கும் முதல்வர், ஆடியோ போலி என அறிக்கை வெளியிட வேண்டியது தானே.
Latest Tamil News


2 ஆண்டுகளாக திமுக அரசு மக்களுக்கு நல்லது செய்யவில்லை. கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளது. 30 ஆயிரம் கோடி கொள்ளை என்றால், நினைத்து பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது. 2 வருடத்தில் இவ்வளவு கொள்ளையடித்து உள்ளனர். 3 ஆண்டுகள் உள்ளது. இன்னும் அவர்கள் கொள்ளையடித்தால், வேறு எவரும் வாழ முடியாது. அவர்கள் தான் வாழ முடியும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களில் பணத்தை சுருட்டுகின்றனர். நிதியமைச்சர் பேசியதை உண்மையா, போலியா என ஆராய வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோவாசகர் கருத்து (20)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  உரத்து பேசி விட்டால் 'கொடநாடு' புத்துயிர் பெற்று விடும் பொதுப்பணி ஊழல் பூதம் கிளம்பிவிடும் இதையெல்லாம் கணக்கிட்டு, சும்மா ஒரு கூட்டத்துல அட்டெண்டன்ஸ் கொடுத்து நாலு வார்த்தை pesi vittaar

 • முருகன் -

  உங்களுக்கு வேறு வழியில்லை அவர்கள் சொல்வதை செய்வதை தவிர

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. இவர்கள் டம்மியாகத்தான் நாடகம் போடுகிறார்கள்,

 • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

  இனி எதிர்க்கட்சியாக செயல்படுவார் .

 • Ravisubramaniam - Coimbatore ,இந்தியா

  எல்லாரும் இப்படித்தான் அப்பா பேசிட்டே இருக்காங்க நான் எத்தனையோ முறைஅந்த ஆட்சி இருக்கும்போது இந்த ஆட்சி இருக்கும் போதும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு என்னுடைய கடிதம் அனுப்பிவிட்ட ஆனால் யாருமே கண்டுக்கல இந்த செய்தி வாயிலாவது நம்ம முதல்வருக்கு ஏதாவது காதுக்கு போகுமா அப்படின்னு ஆசைப்படுறேன் அப்படியாவது எனது ஆராண்டு கால போராட்டம் முடிவுக்கு வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்