Load Image
Advertisement

இட்லி, டீ, மஞ்சளை பயன்படுத்தி கோவிட் உயிரிழப்பை குறைந்த இந்தியர்கள்:ஐசிஎம்ஆர்

புதுடில்லி: இட்லி, தேநீர், மஞ்சள் உள்ளிட்ட உணவு வகைகளால் இந்தியாவில் கோவிட் பாதித்த போதிலும் உயிரிழப்பு வெகுவாகக் குறைந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.


@1brLatest Tamil News


கோவிட் பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை 68.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 11.5 லட்சம் பேரும், இந்தியாவில் 5.31 லட்சம் பேரும் உயிரிழந்து உள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தபோதிலும் இந்தியாவில் கோவிட்டால் உயிரிழப்பு குறைவாகவே இருக்கிறது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு மேற்கொண்டது.ஐசிஎம்ஆர் முன்னாள் தலைவர் நிர்மல்குமார் கங்குலி தலைமையில் சுவிட்சர்லாந்து, பிரேசில், சவுதி அரேபியா, ஜோர்டான் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்தினர்.

இந்த ஆய்வு அறிக்கையின்படி,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவு. ஆனால் அந்த நாடுகளில் கோவிட் தொற்றால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருந்தபோதிலும் கோவிட் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. இதற்கு இந்தியர்களின் உணவுப் பழக்க, வழக்கங்களே முக்கிய காரணம்.

Latest Tamil News

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு



மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியர்களைவிட 20 மடங்கு அதிகமாக இறைச்சியை சாப்பிடுகின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பால்பொருட்கள், மீன், மதுபானம் ஆகியவற்றையும் இந்தியர்களைவிட அதிகமாக உட்கொள்கின்றனர்.

ஆனால் இந்தியர்கள், மேற்கத்திய மக்களைவிட 4 மடங்கு அதிகமாக காய்கனிகளை சாப்பிடுகின்றனர்.நாளொன்றுக்கு 1.2 கிராம் அளவுக்கு தேநீர் குடிக்கின்றனர். 2.5 கிராம் அளவுக்கு மஞ்சளை உணவு வகைகளில் சேர்க்கின்றனர். இதன் காரணமாக இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.இதன்காரணமாக, இந்தியாவில் கோவிட் உயிரிழப்பு வெகுவாக குறைந்ததாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (9)

  • சிந்தனை -

    டீ கம்பெனி காரனுங்க பணம் கொடுத்தா, அதுக்கு இப்டி ஒரு பேட்டி....டீ நோயை அதிகமாத்தான் ஆக்கும்...

  • காங்கிரஸ் வேண்டாம் போடா - Bangalore, Hebbal,இந்தியா

    கொழுப்பு சத்து மிகுந்த இறைச்சியை வாரத்திற்கு ஒருமுறைதான் எடுத்து கொள்கிறோம் மற்றைய நாட்களில் சைவ உணவுகள் தான் , இதுவும் ஒரு காரணியாக இருந்திருக்க வேண்டும்

  • Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா

    நம்ம சமையலில் மஞ்சள் சேர்க்காதது எது? கால காலமா மஞ்சல் நமது உடலில் சேர்ந்து இருக்கும், அப்படி இருந்தும் எப்படி வியாதிகள் தாக்குகின்றது?

  • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

    சிங்கப்பூர் ல் கூட தமிழக உணவகங்கள் covid நாட்களில் தென்னிந்திய உணவான ரசம் (மஞ்சள் பூண்டு மிளகு சேர்த்தது) தனியாக கோப்பைகளில் விற்பனைக்கு கொடுக்க அதை சீனர்களும் மலாய் மக்களும் எதிர்ப்பு சக்தி வர வாங்கி பருகி வந்தனர் ( சீன வைத்திய முறையும் இதை ரகசியமாக அங்கீகரித்ததாம் )

  • அப்புசாமி -

    அப்போ தடுப்பூசி, பூஸ்டர் எல்லாம் தேவையே இல்லியோ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement