ADVERTISEMENT
சென்னை: சென்னை, தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில், முதல்வர் ஸ்டாலின் வசிக்கும் வீட்டின் கூடுதல் கட்டடங்களுக்கு, சி.எம்.டி.ஏ., சார்பில் ஒப்புதல் மற்றும் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில், 15 ஆண்டுகளாக, ஸ்டாலின் வசித்து வருகிறார். இதுவே, முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் உள்ளது.
இங்கு ஏற்கனவே உள்ள தரைதளம், முதல் தளத்தின் இணைப்பாக, இரண்டு தளங்கள் வரையிலான கூடுதல் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதற்கான திட்ட அனுமதி கோரிய விண்ணப்பம், 'ஆன்லைன்' முறையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், ஜன., 3ல் தாக்கல் செய்யப்பட்டது. 'ஸ்னோ ஹவுஸிங்' என்ற நிறுவனத்தின் பெயரில், இதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே உள்ள கட்டடத்துக்கு ஒப்புதல் இருக்கும் நிலையில், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளுடன், கூடுதல் கட்டடம் கட்ட அனுமதி கோரப்பட்டது. உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்ட நிலையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், ஜன., 6ல் ஒப்புதல் வழங்கினர்.
இந்நிலையில், இந்த கட்டட அனுமதி அடிப்படையில் பணிகள் முடிந்ததை உறுதி செய்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், ஏப்., 3ல் பணி நிறைவு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்த விபரங்கள், சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதே வேகத்தில் பொது மக்களுக்கும், 3 நாட்களில் கட்டுமான திட்ட அனுமதி, 3 மாதங்களில் பணி நிறைவு சான்று கிடைத்தால், 'ஆன்லைன்' திட்டம் அதிக வரவேற்பு பெறும் என்கின்றனர், கட்டுமான துறையினர்.
வாசகர் கருத்து (21)
நாங்கள் காசு கொடுத்துவரைபட அனுமதி பெற்று வீடு கட்டி அதற்கான சொத்து வரி நிர்ணயம் செய்யும் படிவத்தை கூடுவாஞ்சேரி நகராட்சியில் கடந்த ஆண்டு கடைசியில் தாக்கல் செய்து அதற்கான வரவு ரசீதையும் வைத்துள்ளேன். இதுவரை ஆணை வரவில்லை. ஆயிரத்தில் காசு கொடுக்காமல் அனுமதி கொடுக்க முடியாது என்ற நிலை. இதுவும் தமிழகம் தான்
தமிழகத்தை ஆண்டு அனுபவிக்க உரிமை இல்லையா ?
இந்த மாதிரி சலுகைகள் கிடைக்கவில்லயென்றால் தான் அதிசயம்.
Chief minister development authority
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
நான் கூட அரசியலுக்கு வரலாமான்னு யோசிக்கிறேன். சேவை செய்ய இல்ல சம்பாரிக்க