Load Image
Advertisement

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்

Coimbatore car blast: Chargesheet filed   கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
ADVERTISEMENT
சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, கைதான ஏழு பேர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன், பலியானார். போலீஸ் விசாரணையில், இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து, பயங்கர சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், கார் குண்டு வெடிப்பை நடத்திய ஜமேஷா முபீனுக்கு, கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், 23, பெரோஸ் இஸ்மாயில், 27, உமர் பாரூக், 39, உள்ளிட்ட, 11 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
Latest Tamil News
இவர்களை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், ஏழு பேர் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மற்றவர்கள் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். கைதானவர்களில் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும், மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதி இளவழகன்முன், இன்று விசாரணைக்கு வருகிறது.


வாசகர் கருத்து (4)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தீம்காவின் வேசம் கலையும் என்று எதிர்பார்க்கலாம்..

  • இவன் -

    இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து னு சொன்னானே, எங்க அவன்

  • s. mohan -

    இவர்கள் மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை வளர்த்து அப்பாவி பொதுமக்களை கொல்ல துடிக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களை உடனே தூக்கிலிட வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்