Load Image
Advertisement

தஞ்சாவூரில் ரூ.2.4 லட்சத்தில் கட்டி முடித்து 15 நாளில் உடைந்த பாலம்

தஞ்சாவூர்: தஞ்சையில் ரூ.2.4 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பாலம், 15 நாளில் உடைந்தது. மணல் லாரி சென்றபோது பாலம் உடைந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Tamil News


தஞ்சாவூர், கீழவாசல் அருகே சிராஜ் நகரில், பழைய ராமேஸ்வரம் சாலையில் உள்ள ஆதாம் வாய்க்கால்களில், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இடையே ரூ.2.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு 15 நாட்களில் இன்று(ஏப்ரல் 20) காலை திருவையாறு பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் பாரத்தை தாங்க முடியாமல், பாலம் இடிந்து உள்வாங்கியது. இதில் லாரியின் பின் சக்கரம் பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது; மதுரையை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பணி சரியாக நடைபெறவில்லை என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஏற்கனவே, இந்த பணியின் போது வாய்க்காலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதை மீண்டும் அவர்கள் கட்டினார்கள். எனவே பணி முறையாக நடைபெறவில்லை. இதனால் லாரி விபத்துக்குள்ளானது.

இப்பகுதியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய சாலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி வேன் விபத்தில் சிக்கினால், மாணவர்களின் கதி என்னவாகும். எனவே தரமற்ற முறையில் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனம் மீதும், இந்த பணிகளை ஆய்வு செய்யாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Latest Tamil News

விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: பணி முடிந்து 15 நாட்கள் தான் ஆகிறது. எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி லாரி அதிக பாரத்துடன் வந்ததே விபத்துக்கு காரணம். இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மீதும், அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தை லாரி உரிமையாளர் கட்டி தருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (58)

  • rama adhavan - chennai,இந்தியா

    உயிர் காப்பீடு, விபத்து காப்பீடு, வண்டி இன்சூரன்ஸ் எடுத்து , முழு தலை கவசம் போட்டுக்கொண்டு தான் பாலங்களை thaandavendum

  • சீனி - Bangalore,இந்தியா

    திராவிட மாடல் பாலம், புட்டுக்கிச்சு...

  • S.kausalya - Chennai,இந்தியா

    லாரி உரிமையாளரும் திமுக தான் இருப்பார். எனவே தான் தானே கட்டி தருவதாக சொல்கிறார்.

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    பாலம் கட்டியவனை தப்ப விட்டு...விட்டு லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது புகார்.......இதுவே விடியல் ஆட்சி.....

  • V.Saminathan - ,

    முதல்ல அந்த மேயரை கண்டிங்க-கட்டின பாலம் சரியா இருந்தா ஏன் பயணிகளை தடுக்கணும்,அதுல கமிஷனை 60% வாங்கினா காண்ட்ராக்டர் என்ன பண்ணுவார்?பொறுப்பில்லாம பேசறவரை முதல்ல மேயர் பதவியிலேர்ந்து நீக்குறதை பாருங்க மாநில அரசே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement