Load Image
Advertisement

சூடானில் இருந்து இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு

Indians suffering from not being able to leave Sudan    சூடானில் இருந்து இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு
ADVERTISEMENT
கார்துாம்: சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் இருந்த போதிலும் கார்துாம் நகரை விட்டு வெளியேற முடியாமல் இந்தியர்கள் தவித்து வருகின்றனர்.

வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் - புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையே சில நாட்களுக்கு முன் பயங்கர மோதல் வெடித்தது. இதில், இதுவரை 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 2,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். சூடானில் வசிக்கும் 4,000 இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Latest Tamil News
இந்நிலையில், சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் இருந்த போதிலும் கார்துாம் நகரை விட்டு வெளியேற முடியாமல் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். உணவு, தண்ணீர் இல்லை, தங்கியிருக்கும் இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கார்துாம் நகரில் இந்தியர்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூடானில் ராணுவம், துணை ராணுவத்தினர் ஆங்காங்கே குழுக்களாக சண்டையிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல்நிலை நிலவி வருகிறது.


வாசகர் கருத்து (3)

  • Raja - Thoothukudi,இந்தியா

    முஸ்லிம் நாடுகளுக்கு நம் மக்கள் போகாமல் இருப்பதே நல்லது. ஏதோ பணம் சம்பாதித்து கோடீஸ்வரனாகிவிடலாம்னு கனவு கண்டுகிட்டு போய் சீரழிந்தவர்கள் ஏராளம். நம் நாட்டில் பிழைப்பதற்கு பங்களாதேஷ் பாக்., மற்றும் பல நாடுகள்ல இருந்து ரோகிங்யா மாதிரி ஆட்கள் ஊடுருவி பிழைக்க வரும்போது நம்மவர்கள் ஏன் வெளிநாடுகளில்குறிப்பாக முஸ்லிம்நாடுகளுக்கு செல்ல வேண்டும். இங்கு குறைந்த வருமானமானாலும் நிம்மதியாக இருக்கலாம்.

  • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

    நம்ம திராவிட மாடல் உக்ரைன் நாட்டுக்கு பஸ் விட்டு இந்தியர்களை அழைத்து வந்த மாதிரி சூடானுக்கு ரெண்டு ஏ.சி. பஸ் ஏற்பாடு செய்யலாம்ல.

  • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

    வெளிநாடுகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் வாழும் இந்தியர்கள் எப்போதும் இரண்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். முதலாவது: இருப்பிடத்தில் குறைந்தது 30 நாட்களுக்காவது உணவும், குடிநீரும் எப்போதும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இரண்டாவது: 24 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறும் வாய்ப்புகள், போக்குவத்து வசதிகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக தகுந்த நபர்களின் தொடர்பில் இருக்க வேண்டும். இல்லையெனில் இதுபோன்ற இடங்களுக்கு போகாமல் இருப்பது நல்லது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்