Load Image
Advertisement

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரை கதறவிட்ட கண்டக்டர் ‛சஸ்பெண்ட்

Conductor suspended for shouting at disabled cricketer    மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரை கதறவிட்ட கண்டக்டர் ‛சஸ்பெண்ட்
ADVERTISEMENT
மதுரை: சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கான அரசு பஸ்சில் மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவாவை அனுமதிக்க மறுத்த கண்டக்டர் ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா, இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டனாக உள்ளார். சென்னையில் இருந்து மதுரை வருவதற்காக நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில், அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான (டி.என். 01 ஏ.என்.3213 பதிவெண்) கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ்சில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.

கண்டக்டரும் பகுதி நேர டிரைவருமான ராஜா, 'இந்த பஸ்சில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை ' என மறுத்ததுடன் அவமரியாதையாக பேசினார். போலீசார் முன்பாகவே, ' நீ மதுரைக்கு வா பார்த்து கொள்ளலாம்' என ராஜா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மற்றொரு பஸ் மூலம் மதுரை வந்த சச்சின் சிவா, மாட்டுத்தாவணியில் உள்ள எஸ்.இ.டி.சி., மண்டல விசாரணை அலுவலகத்தில் ராஜா மீது புகார் அளித்தார். உடனடியாக ராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது குறித்து சச்சின் சிவா கூறுகையில், ''தமிழகம் முழுவதிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இதுபோன்ற நிலை தான் உள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளேன்'' என்றார்.


வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அந்த நாயை டிஸ்ஸ்மிஸ் செய்யணும்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அந்த மனிதாபிமானம் இல்லாத கண்டக்டர் திமுக காரனாக இருப்பான். அதான் அவ்வளவு திமிர்.

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    எல்லாம் திராவிட கொழுப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement