Load Image
Advertisement

நாட்டிலேயே முதன்முறை!: தண்ணீருக்கு தனி பட்ஜெட் கேரளாவில் தாக்கல்

திருவனந்தப்புரம்: கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


Latest Tamil News

கேரளாவில் 44 ஆறுகள், கிணறுகள் ஏரிகள், குளங்கள், ஓடைகள் மற்றும் நல்ல மழை வளம் இருந்தாலும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக தண்ணீருக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா அரசு பெற்றுள்ளது.

Latest Tamil News

இது குறித்து, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:




மாநிலத்தில் நீர் இருப்பு குறைந்து வருவதால் வளத்தை முறையாக பயன்படுத்தவும் நீர் வீணாவதை தடுக்கவும், தண்ணீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும். கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் அதனை தடுக்க இந்த தண்ணீர் பட்ஜெட் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (14)

  • RSK - டாஸ்மாக் நாடு ,இந்தியா

    தண்ணீருக்கு பட்ஜெட் ன்னு சொல்லி கடைசியில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை நிறுத்தி விடுவார்கள். நமது டாஸ்மாக்கி டுமிழர்கள் இலவசத்தை வாங்கிட்டு விக்கிக்கிட்டு சாக வேண்டியதுதான்.

  • ஆரூர் ரங் -

    வெள்ளத்தில் மிதந்து இரண்டே ஆண்டுகளுக்குள் குடிநீர்ப் பஞ்சம்😛. ஆனால் தமிழக அணையை உடைத்து முல்லைப் பெரியாறு நீரை கடலுக்குள் திறந்து விட முயற்சி.

  • DVRR - Kolkata,இந்தியா

    தண்ணீ பட்ஜெட் போடுவது ஆனால் தங்கம் கள்ளக்கடத்தல் செய்வது தரம் கெட்டது

  • அநாமதேயம் - ,

    மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தலாம்.நிறைய ஏரிகள் போன்ற நீர் தேக்கம் கட்டுவது தான் இந்த பிரச்சினை தீர்வு.காடுகளைவெட்டிவருவதை கட்டுபடுத்த வேண்டும்

  • Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா

    தமிழ்நாட்டுல எப்போ "தண்ணீ " பட்ஜெட் போட போறாரு விடியா ஆட்சி தலைவர் ..... அப்பயாச்சும் சொல்லுவாங்களா - எவ்ளோ தண்ணீ கமிஷன் வாங்குறோம்னு ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்