சென்னை: முத்திரை தாள்களை பயன்படுத்துவதில் குறைந்தபட்ச மதிப்பை, 10 ரூபாயில் இருந்து, 100 ரூபாய் என உயர்த்துவதற்கான மசோதா, தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பதிவுத்துறையில், தற்போது மிக குறைந்த மதிப்பில், 10, 20, 50 ரூபாய் முத்திரைத்தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு பதிலாக, 100, 200, 500 ரூபாய் என்ற அடிப்படையில், முத்திரை தாள் குறைந்தபட்ச மதிப்புகள் மாற்றப்படும் என, கடந்த ஆண்டு பதிவுத்துறை மானிய கோரிக்கையின்போது, அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 1899ம் ஆண்டு முத்திரை சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான மசோதாவை, அமைச்சர் மூர்த்தி சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். 2001ல் இருந்து பெரும்பாலான ஆவணங்களுக்கான முத்திரை தீர்வை விகிதங்கள் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளன.

நீதித்துறை அல்லாத பிற பயன்பாட்டுக்கான முத்திரை தாள் அச்சிடும் செலவு பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில், குறைந்தபட்ச மதிப்புகளை திருத்த வேண்டியுள்ளது. இதற்காக முத்திரை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள, இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என, அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
இந்த மசோதாவுக்கு, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., நாகை மாலி, அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார். அரசின் இந்த மசோதா வாயிலாக, குறைந்தபட்ச அளவில் பயன்படுத்தப்படும் முத்திரை தாள்கள் மதிப்பு, 10 மடங்கு வரை அதிகரிக்கும் என்று தெரியவருகிறது.
தற்போது, 20 ரூபாய் முத்திரை தாள் பயன்படுத்தும் இனங்களில் இனி, 200 ரூபாய் முத்திரை தாளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். தற்போது, 100 ரூபாய் முத்திரை தாள் பயன்படுத்தும் இடங்களில் இனி, 1,000 ரூபாய் முத்திரை தாள்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
வாசகர் கருத்து (30)
ஆக சாதாரண மக்கள் இனிமேல் நிலம் வீடு வாங்க முடியாது. திமுகவினர் மட்டுமே வாங்க (ஆக்கிரமிக்க) முடியும் என்பதற்கான வழிதான் இது
இதே போல டாஸ்மாக்கிலும் 10 மடங்கு வரி விதித்தால் ஒரே வருடத்தில் 1 லட்சம் கோடி சம்பாதிக்கலாம்
அப்படியே 200 என்பதை 2000 ஆக மாற்ற வேண்டும்
முத்திரை தாள் விலை 10 மடங்கு அதிகம். EX. வாடகை ஒப்பந்த முத்திரை தாள் முன்பு என்றால் 100 தற்போது 1000. சரி. மாநில guidelines value 100000 என்றால் கைமறும் பணம் 3 முதல் 4 மடங்கு இருக்கும். இதனை 2.5 மடங்கு அதிகரிக்கலாம். வருமான வரி செலுத்த வேண்டி இருக்கும்.மாநில முத்திரை கட்டண வருவாய் கூடும். அரசு வழங்கும் சான்றுகள் கட்டணம் இல்லாதவை. முத்திரை தாள், சேவை கட்டணம் உடைய நோட்டரி பப்ளிக் சான்றை அரசு ஏன் தடை செய்ய கூடாது. கட்சி நிறுவனங்கள் ( ஜி சதுரம் ) பாதிக்காத வகையில் திராவிட கொள்கை முடிவு.
இந்த திராவிடன் இது ஒன்று தான் பாக்கி இருக்கிறது.ஏற்கனவே மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, water tax,,பால் விளை உயர்வு ,விலை வாசி உயர்வு இதையும் உயர்த்தி விட்டார்கள். இது தான் விடியல் ஆட்சிக்கு கடைசியாக இருக்கும் என்றூஆவர்களுக்கு தெரிந்து விட்டது அதற்காக பகல் கொள்ளை அடித்து மக்கள் வயிற்றில் அடித்தால் மக்கள் பார்த்து கொன்டு இருக்கமாட்டார்கள் அண்ணாமலை மலை வந்து திமுக ஆட்சி கொள்ளை அடித்து சொத்து சேர்ந்த அமைச்சர்கள் பட்டியல் வெளியீட்டு விட்டார் திராவிட குடும்பம் மடிந்து விடும்