Load Image
Advertisement

பார்லி.,யில் கேள்வி கேட்டதால் தகுதி நீக்கம்: ராகுல்

பெங்களூரு: பார்லிமென்டில் கேள்வி கேட்டதற்காக என்னை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், குற்றம்சாட்டி உள்ளார்.


Latest Tamil News

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜ.,வினர் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர பிரசாரங்கள் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்., கட்சியினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசியதாவது: அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு உள்ளது என பார்லிமென்டில் கேட்டேன். கேள்வி கேட்டதற்காக என்னை லோக்சபா எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தனர். பாஜ., வின் ஊழல்களை பற்றி நான் பார்லிமென்டில் பேசும்போது மைக்கை அணைத்து விடுகின்றனர். பிரதமர் மோடி அதானிக்கு முழுமனதுடன் உதவி செய்து வருகிறார். உதவி பேராசிரியர், பொறியாளர் நியமனத்தில் பாஜ., லஞ்சம் பெற்றுள்ளது.

கர்நாடகாவில் பாஜ., அரசு செய்யும் அனைத்து பணிகளுக்கும் 40 சதவீத கமிஷன் வாங்கியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். 40 சதவீத கமிஷன் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் இதுவரை பதில் வரவில்லை. நாங்கள் முழுமனதுடன் கர்நாடகா மக்களுக்கு உதவி செய்வோம். மோடியால் பல ஆயிரம் கோடியை அதானிக்கு கொடுக்க முடியும்போது எங்களாலும் மக்களுக்கு தர முடியும்.

Latest Tamil News
அதானிக்கு ஷெல் நிறுவனம் இருப்பதாக நான் பார்லிமென்டில் கூறினேன். மேலும் 20,000 கோடி யாருக்கு சொந்தம் என்று கேள்வி எழுப்பினேன். வரலாற்றில் முதல்முறையாக பாஜ., அரசு பார்லி., அவையை செயல்பட விடவில்லை. பொதுவாக, எதிர்க்கட்சிகள் பார்லி., அவைகள் செயல்படவிடாமல் தடுத்து நிறுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

வரவேற்பு:

கர்நாடகா மாநிலம் கோலாரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெங்களூரு வந்த ராகுலை, விமான நிலையத்தில் காங்., தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் வரவேற்றனர்.வாசகர் கருத்து (28)

 • Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா

  யப்பா உங்கள் வாயில உண்மையே வராத ..... என்ன ஒரு பச்சை பொய்.... மோடி என்ற சமூகத்தை திருட்டு கூட்டத்தோடு ஒப்பிட்டதற்கு கோர்ட் வரை சென்று தங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்து விட்டனர்.. தொகுத்து நீக்கம் செய்தது இந்திய இறையாண்மைக்கு உட்பட்ட அரசியல் அமைப்பு சட்டம்... நல்ல வேலை தமிழகதில் எதை போன்று ஒரு சமூகத்தை பேசி இருந்தால் அவ்வளவு தான் போராட்டம் வெடித்து இருக்கும் ...அந்த வகையில் குஜராத்திகள் அமைதியானவர்கள் போலும் . ராகுல் ஜி என்றாலே பொய்யர் என்று அர்த்தம் போல

 • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

  அதெல்லாம் இருக்கட்டும் +++மக்கள் முட்டாள்களாக இருக்கஊடாது அல்லவா?அப்போ யாருக்கு லாபம்/ யார் காட்டுல மழை?

 • Rajasekar Rajasekar -

  இத்தாலி திருடனின் மாய்மாலம்

 • ramani - dharmaapuri,இந்தியா

  பயித்தியகாரன் போல் கேள்வி கேட்டதால் என்று சொல்லனும் ராஹுல் வின்சி

 • Narayanan Krishnamurthy -

  அதானிக்கு ரத்தின கம்பளம்‌விரித்து முதன் முதலில் அத்வானியை அங்கீகரித்த காங்கிரஸ் தற்போது மோடிஜிதான் அதானிக்கு கடன் கொடுத்தார் என்று கூறும் ஒரு பெரும் புகழுடன் ராகுல் விஜய் மல்லையா, நிரல் மோடி , அட்டன் பர்க் இன்னும் பலருக்கு கடன் கொடுத்து அவர்களை நாட்டை விட்டு தப்பிக்க விட்ட ஒரு மாபெரும் கொள்ளைக்கு ட்ரக் தலைவர் போபர்ஸ் பீரங்கி பேரத்தில் பங்குபெற்று இத்தாலியில் சொத்துக்களை வாங்கிய ஒரு தேசதுரோகி பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நியாயம் , நீதி பெறலாமே அதைவிடுத்து பொய் பிரசாரம் செய்து ஜெயிக்க முடியாது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement