Load Image
Advertisement

மெட்ரோ ரயில்கள் வாங்கியதில் முறைகேடு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கம்

சென்னை-'சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகள் வாங்கியது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எழுப்பிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Latest Tamil News

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னை மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ததில், கடந்த தி.மு.க., ஆட்சியில், தற்போதைய முதல்வருக்கு 200 கோடி ரூபாய், குறிப்பிட்ட நிறுவனம் வழங்கியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக, நேற்று தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:

Latest Tamil Newsசென்னை மெட்ரோ ரயில் திட்டம், மத்திய அரசு, தமிழக அரசு, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்ட திட்டம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நான்கு பெட்டிகளைக் கொண்ட, 42 மெட்ரோ ரயில்களை வாங்க ஏலம் அறிவித்தது.

ரூ.250 கோடி சேமிப்பு

ஏழுமநிறுவனங்கள் விண்ணப்பித்தன; நான்கு நிறுவனங்கள் தகுதி பெற்றன. இதில் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம், முக்கியமான தொழில்நுட்ப அளவுகோலை பூர்த்தி செய்ய தவறி விட்டது; தொழில்நுட்ப தகுதி பெறவில்லை.

எனவே, 'அல்ஸ்டாம்' நிறுவனம், சி.ஏ.எப்., ஸ்பெயின் மிட்சுபிஷி ஆகியவற்றின் கூட்டமைப்பு நிறுவனம், பி.இ.எம்.எல்., நிறுவனம் ஆகியவை தகுதி பெற்றன.

கடந்த 2010 ஜூலை 5 ஏலங்கள் திறக்கப்பட்டன. இரண்டு நிறுவனங்கள் திருத்தப்பட்ட விலை அட்டவணையின்படி மேற்கோள் காட்டின. சி.ஏ.எப்., ஸ்பெயின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை.

எனவே, அதன் ஏலம் நிராகரிக்கப்பட்டது. அல்ஸ்டாம் நிறுவனம் ஏல செயல்முறையின்படி, 'எல் 1' நிலையில் இருந்தது.

'டெண்டர்' செயல்முறையின் ஒவ்வொரு கட்டமும், மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு செயலர் தலைமையிலான, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன், கூடுதலாக ஜே.ஐ.சி.ஏ., நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது.

'ரோலிங் ஸ்டாக்' ஆர்டர், பிரான்சின் அல்ஸ்டாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் முதல் ஒன்பது ரயில்களை, பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வழங்கியது.

பின்பு ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சிட்டியில், ஒரு புதிய உள்ளூர் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவி, மீதமுள்ள ரயில்களை வழங்கினர்.

மெட்ரோ ரயில்களுக்கான ஏலம் அறிவிக்கப்பட்டபோது, ஒரு 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' மெட்ரோ பெட்டி விலை 10 கோடி ரூபாய். பெங்களூரு மெட்ரோவும், 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

ஆனால், மத்திய அரசின் 'டீம்ட் எக்ஸ்போர்ட்ஸ்' பலன்கள் அறிவிப்பு காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஒரு பெட்டியை, 8.57 கோடி ரூபாய்க்கு வாங்க முடிந்தது. இதன் வழியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு, 250 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு குற்றச்சாட்டு

தேர்வு செய்யப்பட்ட அல்ஸ்டாம் நிறுவனம், சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுத்ததற்காக, பல்வேறு நாடுகளில் அபராத நடவடிக்கையை எதிர்கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது உண்மை தான் என்றாலும், சென்னை மெட்ரோ ரயில் கொள்முதலுடன், அவற்றை இணைப்பது முற்றிலும் தவறானது.

வெளிநாட்டு லஞ்ச குற்றச்சாட்டுகளை தீர்க்க, அல்ஸ்டாம் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்ட அமெரிக்க வழக்கில், லஞ்ச குற்றச்சாட்டுகள், இந்தோனேஷியா, எகிப்து, சவுதி அரேபியா, பஹாமாஸ், தைவான் நாடுகளில் உள்ள திட்டங்கள் தொடர்பானவை. இந்தியாவில் எந்த திட்டமும், அந்த வரிசையில் சிக்கவில்லை.

மற்றொரு வழக்கில், 2000 மற்றும் 2006க்கு இடையில், இந்தியா, போலந்து, துனிசியாவில் லஞ்சம் வழங்கியதாக உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் இல்லை.

இந்தியாவில் நடந்ததாக கூறப்படும் சம்பவம், டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தால் நடந்த கொள்முதல் தொடர்பானது.

எனவே, தேர்வு செய்யப்பட்ட, ஏலதாரர் அல்ஸ்டாம் மீது குற்றம் சாட்டப்பட்ட நடவடிக்கைகளுக்கும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கொள்முதல் செய்வதற்கும், எந்த தொடர்பும் இல்லை.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்ட கொள்முதல், நியாயமான மற்றும் வலுவான கொள்முதல் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.

இது தொடர்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், தேவையற்ற சலுகைகள், வெளிநாட்டு வழக்குகளில் குற்றச்சாட்டுகள், 'ெஷல்' நிறுவனங்கள் உடனான தொடர்பு ஆகியவை தவறானவை. எனவே, அவை முற்றிலும் மறுக்கப் படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (32)

  • venugopal s -

    சரி சரி, உங்கள் ரஃபேல் வாட்ச் ஆதாரம் போல் இல்லாமல் இந்த ஊழலுக்காவது நம்பும்படி தகுந்த ஆதாரம் கொடுங்கள்!

  • Asagh busagh - Munich,ஜெர்மனி

    லஞ்ச வாங்குனதுக்கு விளக்கம் அளிக்காம டென்டர் முறையை வெளியிட்டு காமெடி பண்ணுரானுக. திராவிட மாடலினும் மூலம் இவனுக எத சொன்னாலும் தலையாட்டி ஓட்ட குத்த பழக்கபடுத்தி வைச்சுடானுக. அல்ஸ்டாம் லட்சணம் உலகத்துக்கே தெரியும். தெரிஞ்சா தான்ன என்னா, இவனுக ஆண்டவன்கிட்ட கூட கமிஷன் அடிப்பானுக.

  • kannan - Bangalore,இந்தியா

    ஆக எட்டு வருடமாக மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை. அப்புறம் எதற்க்கு மெட்ரொ ரயிலை திறந்து வைப்பதுற்க்கு சென்னை வந்தார்? குற்றம் சாட்டுபவர்கள் தான் நிரூபிக்க வேண்டும். சாதாண நபர்கள் சிபிஐக்கு கோரிக்கை வைக்க முடியாது. சிபிஐ கேஸ் எடுக்க மூன்றே வழிகள்தான் உண்டு. மாநில அரசு, மத்திய அரசு அல்லது கோர்ட் கேட்கவேண்டும். சாதாண நபர்கள் புகார் அளிக்க முடியாது. இது தமிழிநாட்டில் அரசியல் தெரிந்த யாவருக்கும் தெரியும்

  • ராஜா -

    குற்றச்சாட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மேல் தான். அரசு எதற்கு பதில் சொல்ல வேண்டும்? இங்கு ஸ்டாலின் என்றால் அரசா? வெறும் நான்கரை ஆண்டுகள் வாடகை பதவி தான் அரசு.

  • R.Balasubramanian - Chennai,இந்தியா

    CMRL full of corruption, thanks to Stalin adharavalargal

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement