Load Image
Advertisement

அண்ணாமலை அறிவிப்பால் அ.தி.மு.க., அதிர்ச்சி

ADMK shocked by Annamalai announcement    அண்ணாமலை அறிவிப்பால் அ.தி.மு.க.,  அதிர்ச்சி
ADVERTISEMENT

அ.தி.மு.க., - பா.ஜ., இடையிலான கூட்டணியில், அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வரும் நிலையில், 'தமிழகத்தை ஆண்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் அனைவருடைய ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியது, அ.தி.மு.க., தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், இரு கட்சிகளும் தனித்து களம் இறங்கின.

அ.தி.மு.க.,வில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியது. இதை பழனிசாமி தரப்பு விரும்பவில்லை.


இது, இரு கட்சிகள் இடையே புகைச்சலை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இரு கட்சியினரும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
Latest Tamil News
இது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்திய நிலையில், இரு கட்சியிலும் கூட்டணியை விரும்புவோர், மோதலை சரி கட்டினர். எனினும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க., தலைவர்களுக்கும் இடையே, உறவு சரியாக இல்லாத நிலை உள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று, தி.மு.க., தலைவர்களின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் விவகாரங்களை வெளியிட்ட அண்ணாமலை, 'லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, தமிழகத்தை ஆட்சி செய்த, அத்தனை கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்' என்றார்.

அ.தி.மு.க., பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், தமிழகத்தை ஆண்ட கட்சிகளில், தவறு செய்தவர்கள் சொத்து பட்டியல், ஊழல் விபரம் வெளியிடப்படும் என, அண்ணாமலை அறிவித்திருப்பது, அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




- நமது நிருபர் -


வாசகர் கருத்து (35)

  • venugopal s -

    அதிமுகவினர் பாஜகவினர் எவ்வளவு கேவலமாக பேசினாலும் சிரித்துக் கொண்டே வெட்கமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கும் வரை பாஜகவுக்கு கவலை இல்லை!

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இனி தமிழகத்தில் உள்ள அணைத்து ஊழல் கட்சிகளும் சேர்ந்து ஒரு 'கூட்டணி' அமைக்க வாய்ப்பிருக்கிறது.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    பாரபட்சம் எப்படி காட்டமுடியும்

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    காலம் ஒரு நாள் மாறும் ஊழல் இல்லா ஆட்சி மலரும் ,

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    அவரது தலைவர்கள் ஊழல் வெளியீடு இப்போது சந்தி சிரிக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்