பா.ஜ., ஆட்சியில் பயம், பசி, ஊழல் : பிரியங்கா தாக்கு

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பஸ்தாரில் பழங்குடியின சமூகங்களுக்கான சத்தீஸ்கர் அரசின் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின், காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா பேசியதாவது: இன்று சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும் கோஷம் வெற்று முழக்கம் அல்ல. மாநிலத்தில் மிகக் குறைந்த வேலையின்மை விகிதம் மட்டுமே உள்ளது. இதற்கு முன் பா.ஜ., ஆட்சியில் பயம், பசி மற்றும் ஊழல் நிகழ்ந்தன. அப்போது மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது.
சத்தீஸ்கரில் காங்., ஆட்சி மக்களுக்காக உழைக்கிறது. பா.ஜ., ஆட்சியில் பழங்குடியின மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் எந்த திட்டங்களும் வழங்கப்படவில்லை. நீங்கள் அரசாங்கத்தை சார்ந்து இருக்கிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கையை பாஜ., அரசு சிதைத்து விட்டது. இந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் உங்கள் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பிரியங்கா சாமி தரிசனம்:
சத்தீஸ்கரில், பஸ்தாரின் என்ற இடத்தில் உள்ள தண்டேஸ்வரி அம்மன் கோவிலில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா வழிபாடு நடத்தினார்.
பணவீக்கம் குறித்து காங்., மூத்த தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கை: ஏழைகளின் வருமானம்: 50% குறைந்துள்ளது. நடுத்தர வர்க்கம்: 10% குறைந்துள்ளது. பணக்கார வகுப்பு: 40% அதிகரித்துள்ளது.
எவ்வளவுதான் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் பொதுமக்களை வாட்டி வதைத்தாலும், பா.ஜ., அரசுக்கு ஒரே ஒரு இலக்கு மட்டுமே. அது 'நண்பர்களின்' கஜானாவை நிரப்புவது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (47)
என்ன பயம், எங்கே பயம், என்ன பட்டினி, எங்கே பட்டினி நீங்களாக கற்பனை செய்து மக்களிடையே வதந்தியை பரப்பி மக்களிடையே பயத்தை உண்டுபண்ணலாம், மத சண்டையை உண்டு பண்ணலாம் என்று நினைத்தால் அது இனிமேல் நடக்காது. உங்களுடைய போய் பிரச்சாரங்கள் இனி பலிக்காது. நாட்டையே துண்டாடிய உங்களை போன்ற அரசியல் கட்சிகளை முதலில் வேரோடு புடிங்கி எறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்தியா இப்பொழுது தான் ஒரு வளர்ந்த நாடாக மாறிகொண்டிருக்கிறது, அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை உங்களால். முதலில் நீங்கள் மாறுங்கள் அப்புறம் மக்களின் மனதை மாற்ற பார்க்கலாம்.
மோடி ஆட்சிக்கு முன்னால ஏன் நீங்க கோவில் பக்கம் வந்ததே இல்லை.... இப்போ வர்றீங்க...
நம்ம நாட்டுப் பணத்தை அச்சடிக்கிற மிஷினை பாகிஸ்தானுக்கு விற்ற காங்கிரஸுக்கு. நாட்டு நலனைப் பற்றி பேச தகுதியே இல்லை.
வாயைத் திறந்தால் பொய் மழை...
ஆமாம் உங்கள் UPA ஆட்சீயிலும் அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் நாட்டில் என்ன பாலாறு தேனாறு ஒடியதா, இல்லை பசி என்ற ஒன்றே இல்லாமலிருந்த்தா. இல்லை ஏழைகள, பரம ஏழைகள், பிச்சைக்கார்ர்கள் எல்லோரையும் பணக்கார்ர் ஆக்கினீர்கள? .உங்கள் கூட்டணிகட்சிகளில் ஒரு தலைவர் மஞ்சப்பையுடன் திருட்டு ரயுலேறி வந்து உலக பணக்கார்ர் ஆனதும், உங்கள் கட்சி ஊழல் செய்தும் ஊழலுக்கு துணை நின்று மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்ததை தவிர வேறு என்ன செய்தீர்கள். 1975 ல எமர்ஜென்ஸியை எடுத்து வந்து மக்களை பயமுறுத்தவில்லையா? இந்த அழகில் பேச வந்து விட்டீர்கள்.