Load Image
Advertisement

பஞ்சாபில் ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் ஈடுபட்டதாக தெரிகிறது. அதேபோல் அடையாளம் தெரியாத 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Latest Tamil News

பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் இன்று(ஏப்ரல் 12) காலை 4.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்த உடன் அதிவிரைவு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதுடன், அந்த பகுதி அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
Latest Tamil News


ராணுவம் விளக்கம்
ராணுவம் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: பதிண்டா ராணுவ தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பீரங்கி படையை சேர்ந்த 4 வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். இதைத்தவிர வேறு எந்த உயிரிழப்பும், காயமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை. அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் உண்மையை கண்டறிய, பஞ்சாப் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 2 நாட்களுக்கு முன்னர், ரைபிள் மாயமானது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

துரதிர்ஷ்டம்

இந்திய ராணுவத்தின் தெற்கு கமாண்ட் கூறியதாவது: ராணுவ தளவாடங்கள் பிரிவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இது துரதிர்ஷ்டவசமான சம்பவம். ரைபிள் மற்றும் 28 தோட்டாக்கள் தொலைந்து போன நிலையில், அதற்கும் இன்றைய சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவமத்தின் தீவிரம் அறிந்து எவ்வித வதந்திகளையும் யாரும் பரப்ப வேண்டாம். யூகங்கள் அடிப்படையில் ஊடகங்கள் எந்த செய்தியையும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜ்நாத்திடம் விளக்கம்ராணுவ தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே விளக்கம் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


2 பேர் மீது வழக்குப்பதிவு:

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, அடையாளம் தெரியாத 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோவாசகர் கருத்து (22)

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  தேர்தல் நெருங்க நெருங்க ராணுவ வீரர்களுக்கு ஆபத்து

 • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

  எந்த நேரத்தில் பஞ்சாபில் துடைப்பட் கட்டை ஆட்சியில் அமர்ந்ததோ அந்த நிமிடம் முதல்நாடு பூராவுக்கும் பிரச்சினையும் ஆபத்தும் தொடங்கியாச்சு++++ ++அந்நிய கைக்கூலிகளை மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் சிரித்த முகத்துடன் வலம் வரும் ஒயிட் காலர் கிரிமினல்கள்,, மத்திய அரசை எதிர்த்து ,மறை முகமாகவும், ஓபன் ஆகவும் பிரிவினை சவால் எழுப்பப் படும் மேற்கு வங்கம்,தமிழகம், பஞ்சாப், கேரளம் போன்றவற்றால் தொடர்ந்து நாட்டின் இறையாண்மை அச்சத்தில் இருப்பதால் , இந்தியாவின் வளர்ச்சி பொறுக்க மாட்டாத அந்நிய சக்திகள் களிப்பில் மூழ்கியுள்ளன+++ ++இவற்றை எல்லாம் ஏதோ ஜனநாயக அரசியலும் அதன் ஒரு பகுதியாகவும் நிச்சயம் எடுத்துக் கொள்ள முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

 • hari -

  உபிஸ் கருத்து போடுது

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இது அநேகமாக காலிஸ்தான் தீவிரவாத கும்பலின் செயலாக இருக்கலாம்

 • பச்சையப்பன் கோபால் புரம் -

  சுட்டது யார் ? மர்ம நபர்களா??

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement