Load Image
Advertisement

அருணாச்சல் பயணத்திற்கு சீனா எதிர்ப்பு: அமித்ஷா பதில்

"Nobody Can Take Our Land": Amit Shah In Arunachal Amid China's Objection அருணாச்சல் பயணத்திற்கு சீனா எதிர்ப்பு: அமித்ஷா பதில்
ADVERTISEMENT
இடாநகர்: ''இந்தியாவிற்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலத்தை கூட யாராலும் பறிக்க முடியாது'', என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

நம்நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு, சீனா உரிமை கொண்டாடுவதுடன் 'தெற்க திபெத்' என அழைத்து வருகிறது. இங்குள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சூட்டி சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அருணாச்சல், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கே இந்திய உள்துறை அமைச்சர் செல்வது பீஜிங் பிராந்திய இறையாண்மைக்கு எதிரானது. அவரது இந்த செயல் எல்லையில் அமைதிக்கு உகந்தது எல்ல எனக்கூறியுள்ளார்.

இந்நிலையில், அருணாச்சல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமித்ஷா செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

Latest Tamil News
அருணாச்சல பிரதேசத்தின் கிபிதோ என்ற பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்தியாவிற்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட ஒருவராலும் பறிக்க முடியாது. 2014ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியமும் தொந்தரவு பகுதியாக கருதினர். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில், பிரதமரின் கிழக்கு நோக்கிய பார்வை என்ற கொள்கை காரணமாக, வடகிழக்கு பகுதிகள், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளிக்கும் பகுதியாக கருதப்படுகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (13)

  • பாரதி -

    இரும்பு மனிதன் அமித்ஷா.

  • s. mohan -

    அருணாச்சல் பிரதேசமும் இந்தியா தான், அதில் மூக்கை நுழைக்க இந்த சப்பை மூக்கனுகளுக்கு என்ன urimai. இருக்கு. காங்கிரஸ் காலத்தில் சீனாக்காரன் அட்டூழியம் செய்தப்பொழுது அவர்கள் கண்டுகொள்ளவில்லை, இப்பொழுது நடப்பது மோடியின் ஆட்சி, அவரால் மட்டுமே இந்த சப்பை மூக்கங்களை எதிர்கொள்ளும் திராணி உள்ளது. எனவே அடுத்துவரும் தேர்தலிலும் மோடியே பிரதமராக வரவேண்டும்.

  • BALOU - st-denis,பிரான்ஸ்

    திபெத்திற்கு சீனா அதிகாரிகள் சென்றால் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    சீனாவிற்கு சரியான பாடம் புகட்ட பாஜக அரசால் மட்டும்தான் முடியும். ஆகையால் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் பாஜகவை. மீண்டும் மோடியையே பிரதமராக்குவோம். வாழ்க இந்தியா.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    சீனாவிற்கு சரியாபாஜக அரசை. மீண்டும் மோடியையே பிரதமர் ஆக்குவோம். வாழ்க இந்தியா. பாடம் புகட்ட பாஜக அரசால் மட்டும்தான் முடியும். ஆகையால் மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement