Load Image
Advertisement

ஓடும் ரயிலில் தீ விசாரணையில் திடுக் தகவல்

Sudden information on fire investigation in moving train    ஓடும் ரயிலில் தீ விசாரணையில் திடுக் தகவல்
ADVERTISEMENT
பாலக்காடு---ஓடும் ரயிலில் பயணியரை எரிப்பதற்கு, ரயில் நிலையம் அருகில் உள்ள 'பங்க்'கில் பெட்ரோல் வாங்கியதாக, இந்த வழக்கில் கைதான ஷாரூக் சைபி போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எலத்துார் ரயில் நிலையம் அருகே, ஓடும் ரயிலில் பயணியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிய ஷாரூக் சைபியை, சமீபத்தில் போலீசார் மஹாராஷ்டிராவில் கைது செய்தனர்.

அவரை கேரள போலீசார் இங்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

ஷாரூக் சைபியிடம், பயங்கரவாத தாக்குதல் உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பயணியரை தீ வைத்து எரிக்க பயன்படுத்திய பெட்ரோலை, சம்பவத்தன்று அதிகாலை ஷொர்ணுார் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இருந்து ஷாரூக் சைபி வாங்கி உள்ளார்.

இதற்கு அவருக்கு யாரோ உதவி செய்துள்ளனர். அவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியுள்ளோம். இதை வைத்து அவர்களை கைது செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement