Load Image
Advertisement

தமிழ் மொழி, கலாசாரத்தை நேசிக்கிறேன்: மோடி பேச்சு

Love Tamil language, culture: Modi speech   தமிழ் மொழி, கலாசாரத்தை  நேசிக்கிறேன்: மோடி பேச்சு
ADVERTISEMENT

சென்னை: '' தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவற்றை மிகவும் நேசிக்கிறேன்'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடந்த ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு ராமகிருஷ்ண மடம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் கவர்னர் ரவி, மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Latest Tamil News

விழாவில் மோடி பேசியதாவது:
ராமகிருஷ்ண மடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியானது. தமிழையும், தமிழக மக்களையும் சென்னையையும் நேசிக்கிறேன் . சென்னையின் உத்வேகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. எனது வாழ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் முக்கியமான பங்கு உண்டு

வங்கத்தில் பிறந்த விவேகானந்தரை, கதாநாயகன் போல் வரவேற்றது தமிழகம். விவேகானந்தர் வந்து தங்கி சென்ற விவேகானந்தர் இல்லத்திற்கு வந்திருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். காசிக்கும் தமிழகத்திற்கும் உள்ள பிணைப்பை காசி தமிழ் சங்கமம் உணர்த்துகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம் தமிழக இளைஞர்களை வழிநடத்துகிறது.

முந்தைய ஆட்சியில் அடிப்படை வசதிகள் கூட ஏழை மக்களுக்கு அளிக்கப்படவில்லை. தற்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க செய்துள்ளோம். முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் அதிகமான தொழில் முனைவோரை கொண்ட மாநிலமாகவும், இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதன் மூலம் சமுதாயம் முன்னேற்றமடையும்.

இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார். பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தினார். தங்கள் மீதான தடைகளை பெண்கள் உடைத்து வருகின்றனர். அவரது நோக்கத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. விவேகானந்தரின் தத்துவங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. விவேகானந்தர் கண்ட கனவு நனவாகும் வகையில், இந்தியாவிற்கான காலம் இது.

உலகிலேயே சிறந்த தொழில்நுட்ப அறிவியல் களம் இந்தியாவிலேயே உள்ளது. இந்தியர்களுக்கு உயர்கல்வி கிடைக்க வேண்டும் என விவேகானந்தர் விரும்பினார். உலக தரத்திலான கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

திருக்குறள்



இந்த விழாவில் பேசிய மோடி,
''புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.'' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

(இந்த குறளின் விளக்கம்: பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது என்பதாகும்).



வாசகர் கருத்து (12)

  • venugopal s -

    தமிழ் மொழியை நேசிக்கிறேன் என்று வெறும் வாய் வார்த்தையாக சொன்னால் எப்படி? அதைக் கொஞ்சம் செயலிலும் காட்டினால் நன்றாக இருக்கும்!

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    தமிழ், தமிழர், திராவிடம் எல்லாம் டீம்காவுக்கே பட்டா போட்டுக்கொடுத்திருக்கு .... நீங்க அதைப்பத்தி பேசக்கூடாது ...

  • Ellamman - Chennai,இந்தியா

    இன்னும் இன்னும் கூட கடுகெண்ணை..நல்லெண்ணெய் மற்றும் ஊரில் இருக்கும் எல்லா வகை எண்ணெய் பூசிக்கொண்டு உருண்டாலும் ஓட்டுவது மட்டுமே ஓட்டும். வேறே வழி அப்படி சொல்லித்தானே ஆகவேண்டும்.. தமிழன் என்றால் கெத்து...சொல்லவெப்போம் இல்ல

  • Asagh busagh - Munich,ஜெர்மனி

    நாட்டின் பெயர் இந்தியா தமிழியா இல்லை. அதனால் தமிழை மதித்தாலே போதும். பிரதமர் பலமுறை தமிழின் தனித்துவத்தை பற்றி பேசியுள்ளார், இதுவே அவர் தமிழின் மீது வைத்துள்ள மரியாதையை காட்டுகிறது. இதுவே திமுகவினர் தங்கள் பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைத்து விட்டு வெளியில் இந்த எதிர்ப்புனு புரூடா விடுரானுங்க. திங்கிறது துங்குறது எல்லாம் ‘இந்தியா’ என்கிற ஒருங்கினைந்த நாடு கொடுக்கும் பாதுகாப்பில் ஆனால் இந்தி பிடிக்காதாம்.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    அடுத்தாண்டு வருகின்ற MP தேர்தலில் தமிழகத்தில் கால் பதிக்க, தமிழ் மொழி, கலாசாரத்தை நேசிக்கிறேன்: மோடி பேச்சு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்