ரயிலில் பயணிகளுக்கு தீ வைப்பு வழக்கு: மஹாராஷ்ட்ராவில் ஒருவர் கைது

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் 'டி1' கோச்சில் மர்ம நபர் ஒருவர் அதில் பயணம் செய்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் சஹாரா(2), ரஹ்மத், சவுபிக் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தீ வைத்த குற்றவாளி உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு தப்பி சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து, புலந்சாகர் பகுதிக்கு விரைந்த கேரள தனிப்படை போலீசார், அங்கு ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ரயிலில் தீ வைப்பு சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என தெரிய வந்ததை அடுத்து அவரை விடுவித்தனர்.
கைது:
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, மஹாராஷ்ட்ரா மாநிலம் ரத்னகிரியில் ஒருவரை இன்று(ஏப்ரல் 05) மத்திய உளவுப்பிரிவு பயங்கரவாத தடுப்புப்படை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மஹாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் இந்த கொடூர குற்றத்தை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை இவ்வளவு விரைவாக கைது செய்த, மஹாராஷ்டிரா அரசு, அவர்களின் காவல்துறை மற்றும் ஆர்பிஎப் மற்றும் என்ஐஏவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (10)
சமூகத்தின் வளர்ப்பு சரியில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.. ஐந்தில் நல்லது கெட்டது சொல்லித்தருவதில்லை..இனப்பெருக்கம் ஒன்றே தாரகமந்திரம். பிள்ளைகள் எக்கேடுகெட்டு போனாலும் பார்க்காத தாய் தகப்பன் ... பிள்ளையோ தறுதலை...
ஹஹஹஹ ஹா...இவனான்னு உறுதியா சொல்லுங்க..
more than media, We have to be afraid of authorities- they can frame anyone and release anyone. Poor media is a puppet in their hands.
பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டான் போலிருக்கு, மூஞ்சியெல்லாம் ....
யுவர் ஹானர்................. பலர் இருக்க இவர்களுக்கு என்ன பயம் ????????????