Load Image
Advertisement

ஹிந்து வெறுப்பை கண்டித்து அமெரிக்காவில் தீர்மானம்

Resolution against Hindu hatred in America   ஹிந்து வெறுப்பை கண்டித்து அமெரிக்காவில் தீர்மானம்
ADVERTISEMENT
வாஷிங்டன்,ஹிந்து வெறுப்புணர்வை கண்டித்து அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்தியர்கள், குறிப்பாக ஹிந்துக்கள் அதிகளவில் உள்ளனர்.

அமெரிக்க மாகாணங்களிலேயே முதல் முறையாக இங்கு, ஹிந்து வெறுப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:உலகெங்கும், ௧௦௦க்கும் மேற்பட்ட நாடுகளில், 120 கோடிக்கும் மேற்பட்டோர் பின்பற்றும், உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான மதமாக ஹிந்து மதம் உள்ளது.
Latest Tamil News

தனிமனித ஒழுக்கத்தை பின்பற்றுவது, பரஸ்பரம் மற்றவரை மதித்தல், அமைதி ஆகியவை ஹிந்து மதத்தின் அடிப்படையாகும்.மருத்துவம், அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என, பல துறைகளில் அமெரிக்க வாழ் ஹிந்துக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
யோகா, ஆயுர்வேதம், தியானம், இசை, கலை என, கலாசாரத்துடன் இணைந்த ஹிந்து மதத்தினர், இந்த உலகின் நன்மைக்காக பெரிதும் பங்களிப்பு அளித்து வருகின்றனர். ஆனால், அமெரிக்க வாழ் இந்தியர்கள், குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிரான 'ஹிந்துபோபியா' எனப்படும், ஹிந்து பயம், ஹிந்து வெறுப்பு நிகழ்வுகள் அதிகம் நடந்து
வருகின்றன.இதைக் கண்டித்து இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (4)

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    நிதியை கொடுத்துக்கொண்டு மதம் வளர்ச்சி ரிப்போர்ட் கேட்கிறீர்கள். கோவில் இடத்தில் கழிவறை சுடுகாடு, பெரிய இந்து கோவில் முன்பு ஏசுவே மெய்யான தெய்வம் என்று இந்து இடத்தை ஆட்சியாளர்கள் பட்ட கொடுக்கிறார்கள். கொஞ்சம் நல்ல தீர்மானங்கள் போடுங்கள் எங்கள் நாட்டில் இந்துக்கள் நலமாக வாழ

  • எஸ் எஸ் -

    திருப்தி தரும் ஒரு செய்தி...இங்கு நிறைய பேருக்கு மிளகாய் கடித்தது போல் இருக்கும்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அந்த ஒற்றுமை இந்தியாவிலும் வரவேண்டும்.

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    நல்ல முயற்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்