பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை தரும்படி குஜராத் பல்கலைக்கு, மத்திய தகவல் ஆணையம் பிறப்பத்த உத்தரவை , குஜராத் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்த தகவல்களை கேட்ட புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது: ஒரே நாளில் பல முக்கிய முடிவு எடுத்துள்ளதால், பிரதமர் பட்டம் பெற்றிருப்பது மிகவும் முக்கியம். ஐகோர்ட் உத்தரவு காரணமாக பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அவர் பட்டம் பெற்றிருந்தால், அது உண்மையாக இருந்தால், அதனை காண்பிக்க மறுப்பது ஏன்?.
ஐகோர்ட் உத்தரவால், நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஜனநாயகத்தில் கேள்வி எழுப்புவதற்கும், தகவல்களை கேட்பதற்கும் சுதந்திரம் வேண்டும். டில்லி மற்றும் குஜராத் பல்கலைகழகங்களில் பிரதமர் படித்து இருந்தால், அதனை கொண்டாட வேண்டும். மாறாக அதனை மறைக்கிறார்கள். மோடியின் சர்வாதிகாரம் அல்லது போலி பட்டம் காரணமாக தான், குஜராத் பல்கலை பிரதமர் பட்டம் குறித்து வெளியிட மறுக்கிறது.

நாட்டில் வறுமை நிலவியதால், படிக்காமல் இருப்பது பாவம் இல்லை. நம்மில் பலரின் குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக இல்லாத காரணத்தினால், பலர் முறையான கல்வி கற்கவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் நாட்டிற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் படித்து இருந்தால், இந்த திட்டத்தை அமல்படுத்தி இருக்க மாட்டார்.இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
வாசகர் கருத்து (27)
தனி மனித சுதந்திரம் ஓவொரு குடிமகனுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்க பட்டுள்ளது .இவற்றை கேஜரிவால் பார்க்கவில்லையா அல்லது வேறு வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கிறாரா என்று தான் அவர் மீது சந்தேகம் உள்ளது .இந்த தனிமனித படிப்பு ஒன்றும் திறந்த வெளி புத்தகம் அல்ல ? மாறாக தனி மனித சுதந்திரத்திற்கு எதிராக கேட்கப்பட்டுள்ளது நோக்கமும் அதுபோல தான் வருகிறது .இது ஒரு தனிமனித சுதந்திரம் இந்த சட்டம் கூட தெரியாமல் இவர் முதல்வராக இருப்பது வேடிக்கைதான் ...... இவர் கூற்றுப்படி தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக வழங்கி இருந்தால் .பிறகு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களுக்கு பிடிக்காத மாணவர்களுக்கு எதிராக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெற்று வன்முறையாகிவிடுவார்கள் .இது கூட தெரியாத இவர் ஒரு ஐ அர் எஸ் படித்தவராம் ? சட்டமே தெரியவில்லை
இவர் திமுகவிடம் பயிற்சி பெற்றவர். மேடை மாற்றம் செய்வதில் வல்லவர்
தேர்தலில் நிற்கும்போது மோடி Nomination form ல் என்னசொல்லியிருக்கிறார்..?? இப்பொழுது எதற்காக இந்த தர்க்கம்..??
மோடியின் படிப்பு குறித்து இவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை. நல்ல ஆட்சி நடக்கிறது. அதிகம் படிக்காத காமராஜர் போல் ஒரு முதல் அமைச்சர் உண்டா. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எதிர் கட்சி தலைவர்கள் குறித்து ஏன் இவர் கேட்கவில்லை. மெத்த படித்த இவர் கட்சி ஆட்சியில் தீவிர வாதம் பஞ்சாபில் தல தூக்கியுள்ளது. இவரே இவரை ஒரு குழப்பவாதி என ஒப்புக்கொள்கிறார்.
எதிரில் உள்ளவர்களே உங்களிடம் பழைய செல்லாத ரூபாய்கள் கோடிக்கணக்கில் இருப்பது போல் தெரிகிறது அதுதான் இந்த ஆதங்கம். மோடி படிக்காதவர் என்று இருக்கட்டும் ஆனால் என்ன ஒன்பது ஆண்டுகள் உலகமே போற்றும் வகையில் நல்ல ஆட்சியை தந்துள்ளார். மோடியை விருந்துக்கு அழைத்துள்ளார் கைடன் இதைவிட நமக்கு வேறு என்ன பெருமை வேண்டும். உங்களுக்கெல்லாம் பொறாமை, உங்களுடைய திருட்டுத்தனங்களை மோடி அரசு கண்டு பிடித்து விட்டதால் ஆத்திரம் . மேலும் மேலும் கொள்ளையடிக்க முடியவில்லை என்ற ஆத்திரம் அகங்காரம். உங்களை விட மோடி அதிகம் படிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் அவருக்கு இருக்கும் அறிவுக்கூர்மை சாமர்த்தியம் உங்களுக்கு கிடையாது.