Load Image
Advertisement

‛ ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் அதிபர் நம்பிக்கை

கீவ்: போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Latest Tamil News


உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் துவங்கியது. ஓராண்டுகாலமாக நடந்து வரும் போரில், உக்ரைன் பெரும் சேதத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன.

இது குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில் ஜெலன்ஸ்கி பேசியதாவது: இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும். போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது நிலத்தில் ரஷ்யாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம். ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி விரைவில் கொடுப்போம்.

Latest Tamil News

உக்ரைன் பிரச்னை காலங்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பித்துள்ளோம். இதற்கு பின்னால், எங்களால் பெரிய முயற்சிகள் இருந்துள்ளன. உக்ரைனுக்கு போருக்கு உதவி வரும் நாடு மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம். இதனை இந்த உலகம் மறக்காது. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (6)

  • Arul Siva Murugan Velayutham - Bangalore,இந்தியா

    /// போரில் ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை, மீட்போம்.... அப்போ இவ்வளவு நாள் சொன்னதெல்லாம் ???

  • தேவதாஸ் புனே -

    ஆப்கானிஸ்தான் மாதிரி ஆனதுக்கப்புறம்...போடா..... போ.....சொந்த புத்தியோட கொஞ்சம் யோசி.......

  • கெடுவான் கேடு நினைப்பான் - அப்பாவி பட்டி , டாஸ்மாக் நாடு ,இந்தியா

    வெள்ளையர்களை நம்பினோர் தும்பி போல தவிக்க வேண்டும்

  • BALU - HOSUR,இந்தியா

    ஆயிரம் இருந்தாலும் உக்ரைன் வீரர்களின் வீரத்தையும் மனஉறுதியையும் பாராட்டியே ஆக வேண்டும்.ஆனால் அவர்களை ஜெலன்கி என்ற பைத்தியக்கார முட்டாள் வழிநடத்துகிறார்.

  • பேசும் தமிழன் -

    அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூண்டுதலின் பேரில் ரஷ்யா நாட்டுடன் தேவையில்லாமல் பிரச்சினை செய்து உக்ரைன் நாட்டை அழிக்காமல் விட மாட்டார் போல் தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்