ADVERTISEMENT
மாவட்டம் முழுவதும் நகர்,கிராம பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் குப்பையை குப்பை தொட்டிகளில் கொட்டாமல் ரோடு,பொது இடங்களில் கொட்டுகின்றனர்.
சிலர் அதை தீவைத்தும் எரிக்கின்றனர். தொடரும் இப்பிரச்சனையால் மக்கள் சில நேரங்களில் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. உள்ளாட்சிகள் சார்பில் துப்புரவு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை எடுத்த போதிலும் பொதுமக்கள் இது போல் காரியத்தில் ஈடுபடுகின்றனர்.
அதுமட்டுமின்றி அதிகாரிகள் ரோட்டில் குப்பையை கொட்டுபவர்களிடம் எச்சரிக்கை விடுக்கின்ற போதிலும் இந்நிலை தொடர்கிறது.
ரோட்டோரங்களில் கொட்டுகின்ற குப்பை டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது காற்றில் பறந்து சென்று விபத்தை ஏற்படுத்துகின்றது.
இக்காரணத்தால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். தொடரும் இப்ப பிரச்சனை மீது உள்ளாட்சி அதிகாரிகளும் கவனம் செலுத்தாமல் தங்களுக்கு என்ன என இருக்கின்றனர்.
மழை நேரங்களில் ரோட்டோர குப்பைகள் மழை நீரில் அடித்து வீடுகளுக்குள் புகுந்து மக்களை பாடாய் ப்படுத்துகிறது. இப்பிரச்னை மீது மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து (2)
பல ஆயிரம் கோடி விளம்பரம் பண்ணி ஸ்வச் பாரத் ன்னு சொல்லி ஆட்டையை போட்டது மறக்கல்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தென் கைலாயம் ன்னு சொல்லிக்கொண்டு இருக்கும் கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் போகும் பாதை முழுவதும் ஒரு பெரும் குப்பை கிடங்கின் நடுவே நடக்கும் அவலம். சிறுநீர் மற்றும் மலத்தின் துர்நாற்றம் வேறு. ஆறறிவு இருந்தும் அடிப்படை அறிவற்ற கூட்டம்.