ADVERTISEMENT
புதுடில்லி: 'அம்ரித் சரோவர்' திட்டத்தின் கீழ், கடந்த 11 மாதங்களில் மட்டும் நாடு முழுதும், 40 ஆயிரம் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, அவை புனரமைக்கப்படும்' என, கடந்தாண்டு ஏப்., 14ல் பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த திட்டத்துக்கு அம்ரித் சரோவர் என பெயரிடப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து, மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுதும், 50 ஆயிரம் நீர்நிலைகளை மேம்படுத்த, இந்த திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இருந்தாலும், கடந்த 11 மாதங்களில் 80 சதவீத இலக்கு எட்டப்பட்டு விட்டது. இதுவரை, 40 ஆயிரம் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளன.
இதில் பொதுமக்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. திட்டத்தை செயல்படுத்துவதில் உதவுவதற்காக, 54 ஆயிரத்து, 88 பயனாளர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நீர்நிலைகளை சம்பந்தப்பட்ட பகுதியில் அமைக்க முடியுமா? அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்பது போன்ற பணிகளுக்கு, இந்த பயனாளர் அமைப்பு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.
சுதந்திர போராட்ட தியாகிகள், மூத்த குடிமக்கள், பத்ம விருது பெற்ற வர்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தை செயல்படுத்த மிகவும் உதவியாக இருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
கண்மாய், ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி பராமரிப்பது உள்ளூர் பஞ்சாயத்தின் வேலை ஆகும். இதைக்கூட தில்லியில் இருந்து மோதிஜி செய்ய வேண்டிய அவல நிலை. இருந்தும் நாம் ஜி. எஸ். டி. பணத்தில் மத்திய அரசு வஞ்சனை செய்கிறது என்று கூக்குரல் இடுவோம். திராவிட மாடல் வாழ்க !
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்த ஒரு திட்டத்துக்கு செலவு செய்த தொகை போல நாலு மடங்கு போட்டாலும் கூவம் சுத்தமாகாது - ஏனென்றால் அரை நூற்றாண்டாக திட்டமிடாமல் கட்டப்பட்ட சாக்கடைகள் சென்னையில் ஏறாளம். திராவிட மாடலுக்கு நல்ல உதாரணம் முதலை புகழ கூவம்தான்... ஒன்றென்ன ஆயிரம் காமராஜர்கள் வந்தாலும் இவர்களை திருத்துவது சாத்தியமில்லை...