Load Image
Advertisement

இட ஒதுக்கீடு ஆயுதத்தை பா.ஜ., கையிலெடுத்தது ஏன்?

Why did the BJP take up the weapon of reservation?    இட ஒதுக்கீடு ஆயுதத்தை பா.ஜ., கையிலெடுத்தது ஏன்?
ADVERTISEMENT

சென்னை : கர்நாடகாவில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதை பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கியிருப்பதன் வாயிலாக, பிற்படுத்தப்பட்டோரையும், முஸ்லிம்களையும் பா.ஜ., மோத விடுவதாக, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

'பா.ஜ., இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி' என காங்கிரஸ், கம்யூனிஸ்ட்சிகள், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததால் தான், 1990-ல் வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பா.ஜ., விலக்கி கொண்டதாக, தி.மு.க., கம்யூ., கட்சிகள், இன்றும் பிரசாரம் செய்து வருகின்றன.


பா.ஜ.,வை வீழ்த்த, இட ஒதுக்கீட்டை ஓர் ஆயுதமாக, எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வந்தன. இப்போது அதே ஆயுதத்தை, எதிர்க்கட்சிகளை நோக்கி பா.ஜ.,வும் வீச ஆரம்பித்துள்ளது.
Latest Tamil News
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பெரும் பலனை தந்தது. 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாத இக்கட்டான நிலை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டது.

வரும் மே 10-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், எஸ்.சி., பிரிவினருக்கு 15-லிருந்து 17 சதவீதமாகவும்; எஸ்.டி., பிரிவினருக்கு 3லிருந்து, 7 சதவீதமாகவும் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது.

அது மட்டுல்லாது, முஸ்லிம்களுக்கான 4 சதவீத ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, லிங்காயத்துகள், ஒக்கலிகா சமூகத்தினருக்கு, தலா 2 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடக பா.ஜ., அரசின் இந்த முடிவு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஓட்டு வங்கி அரசியலுக்காக, பிற்படுத்தப்பட்டோரையும், சிறுபான்மையினரையும் மோத விடுவதாக, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஆதாயத்திற்காக இட ஒதுக்கீட்டை வைத்து, பா.ஜ., தன் அரசியல் விளையாட்டை நடத்துவதாக, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'யில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

பா.ஜ.,வின் இந்த அரசியலை எதிர்கொள்ளவே, ஏப்., 3-ம் தேதி, பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராகவும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் போராட, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஆர்வம் காட்டுவதாக, அவரது கட்சியினர் கூறுகின்றனர்.


வாசகர் கருத்து (15)

  • Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா

    இட ஒதுக்கீடு என்பது இந்த நாட்டின் பெரும்பான்மையான ஹிந்து மக்களில் பிற்படுத்தப்பட்ட அட்டவணை பிரிவை சார்ந்த சமூகத்தினருக்கு அரசால் வழங்கப்படும் ஒரு சலுகை. அதை புடுங்கி தின்ன நினைக்கும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். .

  • Fastrack - Redmond,இந்தியா

    மத்ததெல்லாம் தாக்கு பிடிக்கிறதில்ல

  • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

    3 படி அரிசி இன்னும் வரலை. காமராஜர் ஸ்விஸ் வங்கி பணம் இன்னும் வரலை. துபாய் 5000 கோடி இன்னும் வரலை. நீட் தேர்வு இன்னும் ரத்து ஆகலை. எல்லாமே லை லை லை லை. முட்டாள்களின் உடன்பிறந்த தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • shyamnats - tirunelveli,இந்தியா

    திரு ராமநாதன் குறிப்பிட்டது, மக்கள்தொகையில் சுமார் >15 சதம் என்பது 2011 ம் ஆண்டில் எடுக்க பட்ட சென்சஸ் படி. இப்பொழுது 20 சதவிகிதத்திற்கு இருப்பவர்களை சிறுபான்மையினர் என்று சொல்வது, அரசு சலுகைகளை வாழங்குவது சரியான சமூக நீதியாகாது. அவர்களிலும் பொருளாதார அடிப்படையில் வழங்கலாம்.

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    எதிர் கட்சி கூட்டம் கூட்டுவது waste

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்