சென்னை: பிளஸ் 2 பொது தேர்வில், உயிரி தாவரவியல் பாடத்தில், தமிழ் வழி மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் கேள்வி இருந்ததால் குழப்பம் அடைந்தனர்.
பிளஸ் 2 பொது தேர்வில், நேற்று உயிரியல் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கு தேர்வு நடந்தது. வினாத்தாளின் தன்மை குறித்து, முதுநிலை ஆசிரியர் சவுந்தரபாண்டியன் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வில், வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. தினசரி தேர்வுகள் மற்றும் பயிற்சி வினாக்களில் இடம் பெற்ற பெரும்பாலான கேள்விகள், பொது தேர்வில் இடம் பெற்றன.

இதன் காரணமாக, அனைத்து பாடங்களையும் படித்த மாணவர்களுக்கு, முழு மதிப்பெண் எடுப்பது மிகவும் எளிது. தேர்ச்சி விகிதமும் இந்த பாடத்தில் அதிகரிக்கும். இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், உயிரி தாவரவியலில் 2 மதிப்பெண் கேள்விகளுக்கான பிரிவில், ஒளிச்சேர்க்கை சார் செயலாக்க கதிர்வீச்சு என்றால் என்ன என்ற கேள்விக்கு, அதன் ஆங்கில வழி சுருக்கமான பி.ஏ.ஆர்., என்றால் என்ன என ஆங்கிலத்தில் கேள்வி இடம் பெற்றது.
தமிழ் வழி மாணவர்கள் கேள்வி என்னவென்றே புரியாமல், பதில் எழுதாமல் விட்டுள்ளனர். தமிழ் வழி மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் இடம் பெற்ற கேள்விக்கு, 2 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து (6)
திராவிட ஆட்சிக்கும் , படிப்புக்கும் தான் காத தூரம் ஆயிற்றே. பின்னர் ஏன் கல்வித்துறையை இன்னும் தமிழக அரசு தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டும். மத்திய அரசிடம் கொடுத்து, அவர்களே பாரபட்சம் இன்றி, தரமான ஆசிரியர், பாடத்திட்டம், பயிற்றுவிப்பு போன்றவற்றை நடத்த அனுமதி தரவேண்டும்.
மொத்தமா எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் அளித்து திராவிட சாதனை படைக்கலாம்.
துக்லகும் அவனின் மங்குனி மந்திரிகளும் இருக்கும் இடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்....
-நீ அடுத்த வருடம் பாடம் நடத்தும் போது அந்த P A R ங்கிற பதத்துக்குள்ள Photosynyhesis Anti Radiation ,ங்கிறதை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மாணவர்களைக்கு விளக்கி புரிய வை-உனக்கு அதுக்குத் தானே அரசு சம்பளம் தருகிறது-அறியாமைக்கு கருணை மருந்து கிடையாது,அது விலகுறது தான் மருந்து-
சரியான கருத்து .... ஒழுங்காக சொல்லிக்கொடுக்காமல் விட்டு விட்டு கருணை மார்க் வேண்டுமாம்
தமிழ்ல கேட்டாலே பதில் தெரியாது.