ADVERTISEMENT
வாஷிங்டன்,'நாசா'வின் நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இன்ஜினியர் அமித் ஷத்ரியா நியமிக்கப்பட்டு உள்ளார்.
நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம், விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டத்தை நாசா துவக்கி உள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 'ரோபாட்டிக்ஸ்' இன்ஜினியர் அமித் ஷத்ரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து, நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத் திட்டம், நிலவுக்கான பயணங்களை மேற்கொள்ளவும், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரையிறக்கவும் நாசாவை தயார்படுத்த உதவும். இத்திட்டத்தின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாப்ட்வேர் மற்றும் ரோபாட்டிக்ஸ் இன்ஜினியர் அமித் ஷத்ரியா நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது தலைமையில், மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
ஏன் இல்லை.. ஆனால் எந்த மாதிரியான திறமை, உழைப்பு என்பதை மட்டும் கேட்டுவிடாதீர்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
திறமை, உழைப்பு ஆகிய இரண்டையும் சொத்தாக உடையவர்களுக்கு இந்தியாவில் இடமில்லையோ ????