Load Image
Advertisement

டவுட் தனபாலு

Dout Dhanapalu    டவுட் தனபாலு
ADVERTISEMENT
தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி: கிராம இளைஞர்கள், 20 ஆயிரம் பேரின் திறனை மேம்படுத்தி, வேலைவாய்ப்பு பெறும் தகுதியை உருவாக்க, 120 கோடி ரூபாய் செலவில் திறன் பயிற்சியும், 25 ஆயிரம் இளைஞர்களுக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் பயிற்சியும் அளிக்கப்படும்.

டவுட் தனபாலு: நல்ல விஷயம் தான்... இந்த 120 கோடி ரூபாயில, எத்தனை இளைஞர்களுக்கு திறன் பயிற்சி தந்தீங்க... அதுல, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைச்சது என்ற புள்ளி விபரங்களை அடுத்த பட்ஜெட்கூட்டத் தொடர்ல மறக்காம எடுத்து வச்சீங்கன்னா, 'டவுட்'டே இல்லாம, தங்களை பாராட்டலாம்!

lll

பத்திரிகை செய்தி:
'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்புக்கு போட்டியாக, ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்பட, 'தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பு உருவாகியுள்ளது. புதிய கூட்டமைப்பு, தி.மு.க., அரசுக்கு ஆதரவாக செயல்படும் என, கூறப்படுகிறது.

டவுட் தனபாலு: அதானே... தங்களுக்கு சரிப்பட்டு வராத கட்சிகள், சங்கங்கள், அமைப்புகளை உடைப்பது, பிளப்பது, போட்டி அமைப்பை உருவாக்குவதை எல்லாம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் ஆரம்பிச்சு வச்சார்... அவரது தனயனும் அதை தட்டாம செய்றாரு என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்:
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, 100ஐ கடந்துள்ளது. இது, மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றாக இருப்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த பரவலை தடுக்க, பொது இடங்களில் முக கவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை, பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

டவுட் தனபாலு: சட்டசபை கூட்டத்தொடர் நடக்குது... அங்க, நீங்க உட்பட உங்க கட்சியினர் யாருமே முக கவசம் அணிந்து வந்த மாதிரி தெரியலையே... கொரோனா தடுப்பு நடவடிக்கை எனும் உபதேசங்கள் எல்லாம் ஊருக்கு தானா; உங்களுக்கு இல்லையா என்ற, 'டவுட்' வருதே!

lll


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement