Load Image
Advertisement

வாகன சோதனையில் பொம்மை காரும் தப்பவில்லை

Even the toy car did not escape the vehicle test   வாகன சோதனையில் பொம்மை காரும் தப்பவில்லை
ADVERTISEMENT
பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் இன்று முதல்வர் பொம்மையின் வாகனத்தை நிறுத்தி தீவிர சோதனை நடத்தினர்.


கர்நாடக சட்டசபைக்கு வரும் மே.10-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேர்தல் பறக்கும் படையினர், மாநில எல்லை பகுதிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
Latest Tamil News
இந்நிலையில் சிக்கபல்லாபுரம் மாவட்டம் தொட்டாபல்லாபூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகதி சுப்ரமணியா கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு முதல்வர் பசவராஜ் பொம்மை தனது காரில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது தேர்தல் பறக்கும்படையினர் காரை நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனைக்குப் பின்னர் காரை விடுவித்தனர். முதல்வராக இருந்தாலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கடமை என்பதால் முதல்வர் பொம்மை காரும் தப்பவில்லை. இது குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.


வாசகர் கருத்து (10)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    இருக்குமிடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி.. கொண்டுபோற நாளில் கரெக்ட்டா பிடிக்கணும்.

  • எஸ் எஸ் -

    நம்ம ஊரில் நடக்குமா? ம்ஹும்...

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    தேர்தலுக்கு பின் அவரும் ஒரு பொம்மைதான். நாற்பது சதம் சாட்சியாக உள்ளதால் சோதனை அவசியம்தான்.

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    இப்போதெல்லாம் பொம்மை கார், பொம்மை விமானம், பொம்மை ரயில், பொம்மை ட்ரோன் இவைகளெல்லாம் கவனிக்கப்பட வேண்டியவைகளே. நன்றாக செக் பண்ணியபின்தான் வியாபாரத்துக்காக கடைகளுக்கு வருகின்றன. செக் பண்ணுவதை மக்கள் பார்த்தால் வியாபாரம் பெருகும்.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இது மாதிரி தமிழகத்தின் முதல்வர் காரும் சோதனைக்கு உட்படுத்த இயலுமா? அது தான் வித்யாசம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்