தமிழக அரசின் பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் மற்றும் கர்நாடக அரசின் பால் உற்பத்தி நிறுவனமான நந்தினி ஆகியவை தயாரிக்கும் தயிர் பாக்கெட்களில், ‛தஹி' என ஹிந்தியில் குறிப்பிடும்படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவு வெளியிட்டது. ‛இது போன்ற ஹிந்தி மொழி திணிப்பை ஏற்க முடியாது' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்து, ‛தயிர் பாக்கெட்களில் ‛கர்ட்' என ஆங்கிலத்திலும் அதன் அருகே தயிர் என தமிழிலும் அச்சிடலாம்' என குறிப்பிடப்பட்டது.
தயிர் பாக்கெட்டில் ஹிந்தி மொழியை புகுத்துவதாக முதல்வர் தரப்பில் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆவினில் இதுவரை ஹிந்தி வார்த்தைகளே பயன்படுத்தப்படாதது போல இங்குள்ள சில கட்சிகள் கூப்பாடு போடுகின்றன. ஆனால் அதே ஆவினில் ஹிந்தி வார்த்தைகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உதாரணமாக முந்திரி பருப்பில் செய்யப்படும் இனிப்பு வகையான ‛காஜூ கட்லி' என்பது ஹிந்தி வார்த்தை. இந்த இனிப்பே வட இந்தியாவில் இருந்து வந்ததாகும். அந்த ஹிந்தி வார்த்தையை ஆவின் அப்படியே பயன்படுத்துகிறது. அதற்கு முந்திரி இனிப்பு என பெயர் வைக்க வேண்டியது தானே!

லஸ்ஸி, குல்பி, மில்க் பேடா போன்ற ஹிந்தி வார்த்தைகள் அடங்கிய ஆவின் தயாரிப்புகளுக்கு இனிப்பு தயிர், குச்சி ஐஸ், பால் இனிப்பு போன்ற பெயர்களை வைத்திருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆவின் மட்டுமல்ல கோ-ஆப்டெக்ஸ் முதல் காதி வரை அரசின் தயாரிப்புகள் பலவற்றில் ஹிந்தி சொல் இடம்பெற்றுள்ளன. அப்படியிருக்கையில், அரசு சார்ந்த தயாரிப்புகளில் முதலில் தமிழ் வார்த்தையும், அடுத்ததாக ஆங்கில வார்த்தையும் அதனை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் அச்சிடலாம் என்றும், அரசு தயாரிப்புகளில் ஹிந்தி வார்த்தை இருக்கும்போதே அம்மொழியை எதிர்ப்பது போல் செயல்படும் முதல்வர், தன் நேரத்தை வீணடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து (30)
ஒருதலைபட்சமாக செயல்படுவது நன்றாக தெரிகிறது.
கட்சியில் யாரும் மதிப்பதில்லை .... கட்டிங் சரியான பர்சண்டேஜ் வருவதில்லை .... பிரதமர் கனவு கனவாகவே இருந்துவிடும் போலிருக்கிறது .... ஆகவே அட்டை கத்தியுடன் ஹிந்தியை எதிர்த்தேன் ....
பேசின் பிரிட்ஜ் தாண்டி ரெயிலில் பயணிக்கும் டுமிலன்களின் நிலைமை பரிதாபமா இருக்கும் சமோசா விலை கேக்கறதுக்கு அபிநயம் பிடிச்சு காமிப்பாங்க ..மிச்சம் காசு கேக்கறதுக்குள்ள இவுங்க படர பாட்ட பாக்கணுமே ..
இந்த ஏமாற்று பேர்வழிகள் அடிக்கும் கூத்துக்கு அளவெ இல்லை . திருமண நிகழ்ச்சியில் இப்போது வாடா இந்திய கலாச்சாரத்தை புகுத்துபவர்களெ இவர்கள் தான். சமீப கால் திருமணங்களில் திருமணத்திற்கு முன்பு வாடா இந்திய கலாச்சாரமாக்கிய மெஹந்தியை இரு நாட்களுக்கு முன்பு கொண்டாடுகிறார்கள் . அது மாட்டு மெல்ல முதல் நாள் பெண்ணையும் மாப்பிலியயையு சேர்த்து வரவேர்ப்பிற்கு7 வரும் போனது வடகத்தியான் போனால் சினிமா பாட்டுகளுக்கு டப்பாங்குத்து பாட்டிற்கு பெண்களும் ஆடி கொண்டு வருகிறார்கள. இப்போ வடகத்தியான் என்று கூறும் தரித் திறன்கள் வாய் என்ன செய்து கொண்டிருக்கிறது? சரியான எனமற்று பேர்வழிகள் . மக்கள் மூடர்கள்
ஆவின் விற்பனை செய்யும் காஜு கட்லி குல்ஃபி இதல்லாம் இந்திதான் என்று கூட தெரியாத ஜென்மங்கள். இவங்களுக்கு ஹிந்தி எது தெலுங்கு எது கன்னடம் எது மாராட்டி எது பெங்காலி எது பஞ்சாபி எதுன்னு ஒரு மண்ணும் தெரியாது.