Load Image
Advertisement

மணீஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி

Manish Sisodia's Bail Application In Liquor Policy Case Rejected By Delhi Court மணீஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி
ADVERTISEMENT
புதுடில்லி: டில்லி அரசின் மதுபான முறைகேடு குறித்த வழக்கில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடில்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் சிசோடியாவின் காவல் ஏப்.,3 அன்று முடிவடைகிறது. அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Latest Tamil News
இந்நிலையில், அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மணீஷ் சிசோடியா தரப்பு கூறியுள்ளது.


வாசகர் கருத்து (4)

  • R Sudarsan -

    Without proper chargesheet and evidence, only to nullify AAP. This way only politicians grow. Courts are mere spectators

  • Vaanambaadi - Koodaloor,இந்தியா

    களவாணிப்பயலுகளா..

  • Rajamani K - Chennai,இந்தியா

    உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தால் இவர்கள் அரசு ஜாமீன் தராமல் அராஜகம் செய்கிறது என்பார்களோ.

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    இருக்கும் இடம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் இருந்த காலிஸ்தான் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் மீண்டும் கொண்டு வந்த கயவர்களுக்கு எப்படிப் பட்ட தண்டனையையும் கொடுக்கலாம்++++++சாராய ஊற்றை திறந்து விட்டு புத்துப் புது குடிகாரர்களை உருவாக்க குடிக்கும் வயதை குறைத்து , சாராய முதலாளிகளுடன் கைகோர்த்து ,, தமிழக டாஸ்மாக் போல மற்ற மாநிலங்களிலும் சாராய சாம்ராஜ்யம் உண்டாக்கி ,,சாராயத்தின் மூலம் ஆட்சியைப் பிடிக்க திட்டம் போட்ட அந்நிய கைக்கூலிகளை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்+++++இன்றைக்கு மீண்டும் ஒரு பிந்தரன் வாலேயை உருவாக்கி விட்டு உத்தமனைப் போல் நடிக்கிறான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்