Load Image
Advertisement

கலாஷேத்ரா மாணவியர் போராட்டம்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: முதல்வர் உறுதி

Kalashetra student protest: Mistakers will be punished: Chief Minister assured   கலாஷேத்ரா மாணவியர் போராட்டம்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: முதல்வர் உறுதி
ADVERTISEMENT
சென்னை: சென்னை, திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது: கலாஷேத்ரா அறக்கட்டளையில், தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து ‛பாலியல் தொல்லை' என செய்தியிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 21ம் தேதி டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதியது. இது தொடர்பாக, கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர், நமது மாநில காவல்துறைத் தலைவரைச் சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். பிறகு தேசிய மகளிர் ஆணையமே ‛நாங்கள் நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் அவ்வாறு விசாரித்தோம்; அந்த விசாரணையை முடித்து வைத்து விட்டோம்' என 25ம் தேதி டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதி தெரிவித்திருக்கிறார்கள்.

பின்னர், நேற்று முன்தினம் (மார்ச் 29) மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்ராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்றுள்ளார். அப்போது காவல்துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.


இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்ரா அறக்கட்டளையில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன்.

இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டார்கள். அரசைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (3)

  • RAAJ -

    கலாக்ஷேத்தர விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட அரசை பாராட்டுவோம். அதே சமயம் பல் புடுங்கிய ஐபிஎஸ் அதிகாரியை காப்பாற்ற முயற்சிப்பது ஏன்? தடுக்கி விழுந்ததில் பல் உடைந்து விட்டதாக வாக்குமூலம் வாங்கியுள்ளது காவல் துறை. அத்தனை பேரும் தடுக்கி விழுந்தார்களா? நகைப்பாகவும் அசிங்கமாகவும் உள்ளது. சவுக்கு சங்கர் விளாசித் தள்ளுவதை எல்லோரும் கேட்க வேண்டும். இந்த அக்கிரமத்தை மறைக்க ஆவின் தஹி மேட்டரையும் கலாஷேத்தர மேட்டரையும் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

  • vbs manian - hyderabad,இந்தியா

    பூங்காவனத்தில் சூறாவளி. நம்பமுடியவில்லை.

  • Balaji - Chennai,இந்தியா

    வேலில போற ஓணானை வேட்டிக்குள்ள உட்ட கதை போல இது ஆகும்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement