Load Image
Advertisement

ஆபாச நடிகைக்கு பணம்: கிரிமினல் வழக்கில் கைதாகிறார் டிரம்ப்?

Trump indicted in Manhattan, becoming first ex-president charged with a crime ஆபாச நடிகைக்கு பணம்: கிரிமினல் வழக்கில் கைதாகிறார் டிரம்ப்?
ADVERTISEMENT
வாஷிங்டன்: ஆபாசப் பட நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் அளித்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், தொழிலதிபருமான டொனால்டு டிரம்ப் (76 வயது), ஆபாசப் பட நடிகையான ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். இந்த விஷயம், 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை மறைப்பதற்காக நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து டிரம்ப் 1.30 லட்சம் அமெரிக்க டாலர் பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அந்த நடிகை வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Tamil News
இது தொடர்பாக டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபர் அல்லது முன்னாள் அதிபர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டது இதுவே முதல் முறை. டிரம்ப் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தற்போது புளோரிடா மாகாணத்தில் இருக்கும் டிரம்ப், விசாரணைக்காக நியூயார்க் வரும்போது அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக தான் களமிறங்க உள்ளதாக டிரம்ப் கூறிய நிலையில் இந்த நடவடிக்கை அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (9)

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    அஷியாடிக் அவர்களது கருத்தில், இப்ப அமெரிக்காவிலேயும் ஜனநாயகத்தை ஜெர்மனி கவனிக்குமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் சந்தேகப்படுவது சரிதான். ஜெர்மனி கவனிக்கும். ஆனால் அதை அமெரிக்கா கண்டுகொள்ளாது, அதற்காக பயப்படவும் செய்யாது. அதுதான் ஜனநாயகம். தன்னை பற்றி எவர் தெரிந்திருப்பாரோ அவர், தன்னை பற்றிய மற்றவர் கருத்துக்களை சீண்டவே மாட்டார். தான் யார் என்பதுதான் நிலையானது. தனக்கு இருக்கும் இமேஜ் என்னும் பிம்பம் நிலையானது அல்ல.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    முந்தைய அதிபரையும் கைது செய்யும் அளவுக்கு சட்டம் தன் கடமையை செய்கிறது அமெரிக்காவில். ஆனால், இங்கு ஒரு அரசியல் வாரிசு ஒரு சமூகத்தினரை தரக்குறைவாக பேசியதற்கு கைது செய்ய நடவடிக்கை எடுத்தால் பொங்கி எழுகிறார்கள் ஒன்றுக்கும் உதவாத அவரின் ஆதரவாளர்கள். பிறகு நாடு எப்படி உருப்படும்?

  • vbs manian - hyderabad,இந்தியா

    ஜெர்மனி ஏன் மௌனம்.

  • vbs manian - hyderabad,இந்தியா

    நாடு சட்ட விதிகளுக்கு உட்பட்டு டிரம்ப் மீது நடவடிக்கை. உடனே அவர் தர்ணா போராட்டம் என்று ஆரம்பிக்கவில்லை. அவர் கட்சியினர் ரயில் மறிப்பு சாலை மறிப்பு கூட்டம் என்று ஆரம்பித்து மக்களை தொல்லை படுத்தவில்லை. ஜனநாயகம் சீர்குலைவு என்ற ஒப்பாரி இல்லை. இங்குள்ளவர்களுக்கு உரைக்குமா.

  • kulandai kannan -

    அமெரிக்காவில் ஜனநாயகத்துக்கு நெருக்கடி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்