Load Image
Advertisement

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்

Masks are mandatory in all government hospitals in Tamil Nadu   தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்
ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள் என அனைவரும் மாஸ்க் அணிய வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Latest Tamil News

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், உடன் வருவோர், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்