ADVERTISEMENT
இந்துார்: மத்திய பிரதேசத்தில் ராம நவமி வழிபாட்டின் போது, கோவிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மூடி சரிந்து விழுந்ததில், பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில், பழமையான பேலேஷ்வர் மஹாதேவ் கோவில் உள்ளது. இங்கு, ராம நவமி கொண்டாட்டத்தை ஒட்டி, நேற்று ஏராளமானோர் வழிபாட்டிற்காக வந்திருந்தனர். கோவிலின் உள்ளே இருந்த தரைக்கிணறு, இரும்பு கம்பியால் மூடப்பட்டிருந்த நிலையில், அதன் மேல் 50க்கும் மேற்பட்டோர் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது பாரம் தாங்காமல் இந்த இரும்பு மூடி சரிந்து விழுந்தது. இதன்மேலே நின்றிருந்த 50க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. கிணற்றில் விழுந்த ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
பல மணி நேர போராட்டத்துக்குப் பின் கிணற்றில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில், பழமையான பேலேஷ்வர் மஹாதேவ் கோவில் உள்ளது. இங்கு, ராம நவமி கொண்டாட்டத்தை ஒட்டி, நேற்று ஏராளமானோர் வழிபாட்டிற்காக வந்திருந்தனர். கோவிலின் உள்ளே இருந்த தரைக்கிணறு, இரும்பு கம்பியால் மூடப்பட்டிருந்த நிலையில், அதன் மேல் 50க்கும் மேற்பட்டோர் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பல மணி நேர போராட்டத்துக்குப் பின் கிணற்றில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து (16)
ஆழ்ந்த அனுதாபங்கள்....
பக்தி பரவசத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை பக்தர்கள் மறந்து விட்டார்கள்.
ராமநவமி அன்று இது நடந்திருக்கு என்றால் இவர்கள் ராமர் பெயரை உபயோகப்படுத்தி சுயலாபம் அடைவதை ராமரே எதிர்க்கிறார் என்று அர்த்தம்.
ராமநவமி அன்று புனிதமான திரிபுரா சட்டசபையில் உட்கார்ந்து கொண்டு செய்யக்கூடாத வேலை செய்த பி ஜெ பி எம் எல் ஏ பாவத்த வேற எப்படி கழுவுவார்?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நமது ஹிந்துக்களுக்கு உள்ள ஒரே பிரச்சினை இது தான்.பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலில் ஒரே நேரத்தில் பெருங்கூட்டமாக குவிந்து தீபாராதனை, அபிஷேக சமயத்தில் முண்டி அடித்துக்கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தான் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் சுயநலம் உள்ளது! கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற பெருந்தன்மை பெரும்பாலானோருக்கு இல்லை.