Load Image
Advertisement

வாலாட்டும் ரவுடிகள்: கணக்கெடுக்க உத்தரவு

Tailing raiders: order to enumerate   வாலாட்டும் ரவுடிகள்: கணக்கெடுக்க உத்தரவு
ADVERTISEMENT
சென்னை : புதிய ரவுடிகளை கணக்கெடுத்து, பட்டியலை அனுப்புமாறு, அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதி, சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல், ரவுடி மற்றும் கூலிப் படை மீது நடவடிக்கை எடுக்க, தமிழக காவல் துறையில் அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவு செயல்படுகிறது.

இப்பிரிவுக்கு, டி.ஜி.பி., சைலேந்தரபாபு பிறப்பித்துள்ள உத்தரவு:

* காவல் நிலைய பட்டியலில் இல்லாத ரவுடிகள் மற்றும் ஜாமினில் வெளிவந்துள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
Latest Tamil News
* கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகள் மீது நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிடியாணைகளை செயல்படுத்த வேண்டும்.

* குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, 'ஏ பிளஸ், ஏ, பி, சி' பிரிவு என, ரவுடிகளை வகைப்படுத்த வேண்டும்

* ரவுடிகளுக்கு அடைக்கலம் தருபவரையும் கைது செய்ய வேண்டும்.

* புதிதாக ரவுடியிசத்தில் ஈடுபடும் நபர்களை பற்றி அனைத்து தகவல்களுடன் பட்டியல் தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.


வாசகர் கருத்து (16)

  • கல்யாணராமன் -

    எங்க தல என்ன சூப்பரா போஸ் குடுக்குறாரு பாரு. இதுல போட்டியே ஸ்டாலினுக்கும் இவருக்கும்தான்.

  • Saai Sundharamurthy AVK -

    இது வரை யாரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதாக தகவல் இல்லை. ராணுவ வீரரை கொன்ற திமுக புள்ளியை பற்றிய செய்தியையே காணோம். எல்லாம் திராவிட மாடலிங் "வாயால் வடை சுடும்" டிராமா தான்....... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது வடிவேலு நடித்த 23ம் புலிகேசி காமெடி மாதிரி உள்ளது.

  • Ramesh - Chennai,இந்தியா

    குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க வேண்டுமென்றால் டாஸ்மாக் இருக்கும் தெருக்களில்/சாலைகளில் போய் நின்றால் எளிதாக வேலை முடியும். அதுபோல் ரெளடிகளை பிடிக்க வேண்டுமென்றால் அறிவாலயத்திற்க்கும்/கோவாலபுரத்து வீட்டிற்க்கும் போனால் சோலியை முடிச்சுடலாம். அதை விட்டுட்டு போகாத ஊருக்கு வழி சொல்லிட்டுருக்காரு கையாலாகாத சைலண்ட் பப்பு

  • நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா

    அருமை. அருமை. கணக்கெடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

  • raja - Cotonou,பெனின்

    கையை வெட்டுவோம், காலை உடைபேண்ணு சொன்னவன், மகலீரை தலையில் அடித்தவன், கல் எறிந்து தொண்டனையே அடித்தவன் எல்லாம் ரவுடி லிஸ்ட்ல வரமாட்டாங்களா பாஸ்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்