Load Image
Advertisement

நிருபர் கைது விவகாரம் : ரஷ்யாவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

Reporter arrest issue: Americans ordered to leave Russia   நிருபர் கைது விவகாரம் : ரஷ்யாவிலிருந்து அமெரிக்கர்கள்  வெளியேற உத்தரவு
ADVERTISEMENT
மாஸ்கோ: அமெரி்க்க நிருபர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்புமாறு அமெரிக்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜார்னல் என்ற பத்திரிகை நிருபர் இவான் ஜெர்ஷ்கோவிச் , ரஷ்யாவில் இருந்தபோது அவரை அந்நாட்டு உளவுப்பிரிவினர் கைது செய்தனர். அமெரிக்காவிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்ட நிலையில் அவரை கைது செய்துள்ளது.
Latest Tamil News

நடந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், எந்த ஆதாரமின்றி அமெரிக்க நிருபரை ரஷ்யா கைது செய்துள்ளது. இனி ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், சுற்றுலா பணிகள் உள்பட அனைவரும் அங்கிருந்து வெளியேறி உடனடியாக நாடு திரும்ப வேண்டும். இவ்வாறு் அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement