Load Image
Advertisement

புகார் கொடுக்க வருபவர்களை வாய்க்கு வந்தபடி திட்டும் பெண் அதிகாரி

The female officer verbally abuses those who come to complain   புகார் கொடுக்க வருபவர்களை வாய்க்கு வந்தபடி திட்டும் பெண் அதிகாரி
ADVERTISEMENT
''வாய்க்கு வந்தபடி ஏசுதாவளாமே அந்தம்மா...'' என்றபடியே, நாளிதழை மடித்து பெஞ்சில் வைத்தார் அண்ணாச்சி.

''விபரமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் போலீஸ் ஸ்டேஷன் இருக்குல்லா... அங்க, தனியா குற்றப்பிரிவை சமீபத்துல தான் ஆரம்பிச்சாவ... அங்கன பொறுப்பு வகிக்கிற பெண் அதிகாரியிடம் புகார் குடுக்க போனா, கொலையா கொன்னு எடுத்துடுதாங்க வே...

''புகார் குடுக்க வர்றவங்களை வாய்க்கு வந்தபடி அசிங்கமா ஏசுதாங்க... அதனால, ஸ்டேஷன் பக்கம் வரவே ஜனங்க பயப்படுதாவ வே...
Latest Tamil News
''ரியல் எஸ்டேட் விவகாரத்துல, கட்டப் பஞ்சாயத்து செஞ்சு காசு பார்க்காங்க... பிடிபடும் குற்றவாளிகளிடம் பேரம் பேசி, 'டீல்' முடிஞ்சா வெளியே அனுப்பிடுதாங்க வே...

''இல்லன்னா, 'உள்ள' தள்ளிடுதாங்க... 'இந்தம்மா வந்த பிறகு தான் குற்றங்கள் அதிகரிச்சுட்டு'ன்னு ஏரியா மக்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''லஷ்மி மேடம் சொல்லிட்டா, அதுக்கு அப்பீலே கிடையாதுண்ணா...'' என, மொபைல் போனில் பேசிவிட்டு வைத்தார் குப்பண்ணா.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement