Load Image
Advertisement

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதல் :9 பேர் உயிரிழப்பு

9 killed in US military helicopter collision   அமெரிக்காவில்  ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதல் :9 பேர் உயிரிழப்பு
ADVERTISEMENT
வாஷிங்டன், அமெரிக்காவில், ராணுவத்திற்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒன்பது ராணுவ வீரர்கள் பலியாகினர்.

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான 'பிளாக் ஹாக்' ஹெலிகாப்டர்கள், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி அளவில், வழக்கமான ரோந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

கென்டக்கி மாகாணம் டிரிக் கவுன்டி என்ற இடத்தில், இரண்டு ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகின.
Latest Tamil News
இந்த விபத்தில், ஹெலிகாப்டர்களில் பயணித்த ஒன்பது ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம், அலபாமா நெடுஞ்சாலையில், பயிற்சியின் போது, பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், இரண்டு விமானிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement